Srimad Rahasyatrayasaram - ஸம்ப்ரதாய ப்ரக்ரியா பாகம் – 29.சரம ச்லோக அதிகாரம் (பத்தி 126)

ஸம்ப்ரதாய ப்ரக்ரியா பாகம் – 29.சரம ச்லோக அதிகாரம்

ப்ரபந்நனுடைய கர்மங்களை நண்பர்களும் விரோதிகளும் பங்காகப் பெறுதல் குறித்த விளக்கங்கள் - பங்கு பெறும் கர்மங்கள் எவை?

மூலம் – இப்படி ஸர்வகர்மங்களும் கழியாநிற்க, ஸுஹ்ருத்துக்களும் த்விஷத்துக்களும் கூறிட்டுக் கொள்ளுமவை எவை என்னில் - அச்லேஷ விநாச விஷயங்களும், புத்திபூர்வோத்தர புண்யங்களில் கர்மாந்தர ப்ரதிபத்த பலன்களும்.

– ப்ரபந்நனுடைய அனைத்து கர்ம பலன்களும் இவ்விதம் நீங்கிய பின்னர், அவனுடைய மரணத்திற்குப் பின்னர், அவனுடைய நண்பர்களும் விரோதிகளும் பங்கிட்டுக் கொள்வது எவை? அழியாமல் மீதம் உள்ள சில பாப பலன்களை அவனுடைய விரோதிகள் பெறுகின்றனர்; ப்ரபத்திக்குப் பின்னர் புத்தியால் உணர்ந்து செய்யப்பட்ட புண்ணியங்களில், மற்ற சில கர்மங்களால் பலன் அளிக்காமல் தடைப்பட்டுக் கிடந்த சில புண்ணியங்களை அவனுடைய நண்பர்கள் பெறுகின்றனர்.