Srimad Rahasyatrayasaram - ஸம்ப்ரதாய ப்ரக்ரியா பாகம் – 29.சரம ச்லோக அதிகாரம் (பத்தி 119)
ஸம்ப்ரதாய ப்ரக்ரியா பாகம் – 29.சரம ச்லோக அதிகாரம்
பாகவத அபசாரம் விலக்குதல்
மூலம் – இப்படி யசசக்தி அபராதங்களைப் பரிஹரித்துக் கொண்டு போகா நின்றால், பாகவதாபசாரமும் அதுடையாரோடு ஸம்ஸர்கமும் போரப் பரிஹணீயம். ப்ரஹ்மவித் பாபவர்காணாம் அநந்தாநாம் மஹீயஸாம் தத் த்வேஷி ஸங்க்ரமம் ஜாநந் த்ரஸ்யேத் ததபராதத: ஸாபராதேஷு ஸம்ஸர்கே அபி அபராதாந் வஹத்யஸௌ வோதுமீச்வர க்ருத்யாநி தத்விரோதாதபீப்ஸதி
– இவ்விதமாகத் தன்னால் இயன்றவரை பாபங்களை விலக்கும்போது, பாகவத அபசாரம் செய்யாமலும், அதனைச் செய்பவர்களுடன் ஸம்பந்தம் கொள்ளாமலும் இருப்பதற்கு முயலவேண்டும். ப்ரஹ்மவித் பாபவர்காணாம் அநந்தாநாம் மஹீயஸாம் தத் த்வேஷி ஸங்க்ரமம் ஜாநந் த்ரஸ்யேத் தத் அபராதத: - ப்ரஹ்மத்தை அறிந்தவனால் செய்யப்பட்ட எண்ணற்றதும் பெரியதும் ஆகிய பாபங்கள் அனைத்தும், அவனை வெறுப்பவர்களிடம் சென்று சேரும்; ஆகவே அவர்களிடம் அபசாரப்படுதல் குறித்து அஞ்சவேண்டும். ஸாபராதேஷு ஸம்ஸர்கே அபி அபராதாந் வஹதி அஸௌ வோதும் ஈச்வர க்ருத்யாநி தத் விரோதாத் அபீப்ஸதி – ப்ரஹ்மவித்துக்களிடம் அபசாரம் செய்த ஒருவனுடன் சேர்ந்தாலும் அபசாரம் செய்தவன் ஆகிறான்; அதே நேரத்தில் ப்ரஹ்மவித்துகளுக்கு அபசாரம் செய்யும் ஒருவனைத் தண்டிக்க முனைந்தாலும், ஈச்வரன் செய்வதான தண்டித்தல் போன்ற செயல்களைத் தான் சுமந்தவன் ஆகிறான்.