Srimad Rahasyatrayasaram - ஸம்ப்ரதாய ப்ரக்ரியா பாகம் – 29.சரம ச்லோக அதிகாரம் (பத்தி 118)

ஸம்ப்ரதாய ப்ரக்ரியா பாகம் – 29.சரம ச்லோக அதிகாரம்

அறிந்து கொண்டே ப்ரபந்நன் ஏன் பாபம் செய்யக்கூடாது என்பதன் காரணம்

மூலம் – ஆனபின்பு ஒரு படியாலும் பகவந் நிக்ரஹம் வாராமைக்காக புத்தி பூர்வாபராதம் பரிஹரணீயம். ப்ரீதிமேவ ஸமுதிச்ய ஸ்வதந்த்ர அஜ்ஞாந அநுபாலநே நிக்ரஹாநுதய: அப்யஸ்ய நாந்தரீயக ஏவ வா

– எனவே எந்தவிதத்திலும் பகவான் தண்டனை அளிக்காதபடி, புத்தி அறிந்து செய்யும் பாபங்களை முற்றிலுமாக விலக்கவேண்டும். ப்ரீதிமேவ ஸமுதிச்ய ஸ்வதந்த்ர அஜ்ஞாந அநுபாலநே நிக்ரஹாநுதய: அப்யஸ்ய நாந்தரீயக ஏவ வா – பகவானுடைய ப்ரீதி என்பதையே பலனாக எண்ணியபடி, சுதந்திரமான ஸர்வேச்வரனுடைய கட்டளைகளைப் பின்பற்றியபடி இருந்தால், அவனுடைய தண்டனை கிட்டாமல் இருத்தல் என்பதே, நாம் வேண்டாமல் தானாகவே வரும் பலன் ஆகும்.