Srimad Rahasyatrayasaram - ஸம்ப்ரதாய ப்ரக்ரியா பாகம் – 29.சரம ச்லோக அதிகாரம் (பத்தி 117)
ஸம்ப்ரதாய ப்ரக்ரியா பாகம் – 29.சரம ச்லோக அதிகாரம்
அபராதங்கள் செய்தபடி உள்ளபோதிலும், அதற்காக மனவருத்தம் கொள்ளாத ப்ரபந்நர்கள் குறித்து நஞ்ஜீயர் கூறுவதன் கருத்து
மூலம் – அபசாராநந்தரம் அநுதாபம் பிறந்ததில்லையாகில் ஞானம் பிறந்ததில்லையாகக் கடவதென்ற நஞ்ஜீயர் வார்த்தைக்கும் அநுதாபம் பிறவாதவருடைய ஞானமாந்த்யத்திலே தாத்பர்யம். ஸோபாதிகளான பகவதபிப்ராய பேதங்களுக்கு ஈடாக வரும் புத்திபூர்வாபசாரம் சிலர்க்குப் பிறவாது; சிலர்க்குப் பிறந்தவை அநுதாபாதிகளாலே கழியும்; கடின ப்ரக்ருதிகளுக்கு அநுதாபம் பிறவாது. ஆகையால் புத்தி பூர்வ உத்தராகம் பிறந்தால் அநுதப்தனாய்ப் புந:ப்ரபத்தி பண்ணாதபோது உபக்லேசம் சொல்லுகிற ச்ருத்யாதிகளின் கட்டளையிலே லகு ப்ரத்யவாயத்தாலே தீரும். விவேகாநாம் ப்ரபந்நானாம் தீபூர்வாகஸ்யநுத்யம: மத்யாநாமநுதாபாதி: சிக்ஷா கடிந சேதஸாம்
– “ப்ரபந்நன் ஒருவன் தான் செய்த அபசாரத்திற்காக வருந்தவில்லையென்றால், அவனுக்கு ஞானம் பிறக்கவில்லை என்றே கொள்ளவேண்டும்”, என்று நஞ்ஜீயர் உரைத்தார்; ஆனால் இவ்விதம் அவன் வருந்தாமைக்குக் காரணம் அவனுடைய மந்தமான புத்தியே ஆகும். “பகவானுடைய விருப்பம் இன்மையைப் பெற்றுத் தரும்” என்பதான புத்தி அறிந்து செய்கின்ற பாபங்களானவை பூர்வகர்மங்களால் உண்டாகின்றன; இவை ஒரு சில ப்ரபந்நர்களுக்கு உண்டாகாது. ஒரு சிலர் ப்ரபந்நர்களுக்கு இவ்விதம் உண்டாகும் பாபங்கள், அவர்கள் அதற்காக வருந்தியவுடனேயே கழிந்துவிடும். கடினமான மனம் கொண்டவர்கள் இவ்விதம் வருந்தமாட்டனர். ஆகவே புத்தி அறிந்து செய்கின்ற பாபங்கள் செய்த ப்ரபந்நன் அதற்காக வருந்தி, ப்ராயச்சித்த ப்ரபத்தியைச் செய்யாதபோது, அவற்றுக்கான துன்பங்களை அனுபவிக்கவேண்டும் என்று ச்ருதிகள் கூறுவது போன்று, இங்குள்ளபோதே சிறிய தண்டனைகள் கிட்டுவதன் மூலம், அந்தப் பாபங்கள் நீங்குகின்றன. விவேகாநாம் ப்ரபந்நானாம் தீபூர்வாகஸ்யநுத்யம: மத்யாநாமநுதாபாதி: சிக்ஷா கடிந சேதஸாம் – விவேகம் அடைந்த ப்ரபந்நர்களுக்கு புத்தி அறிந்து செய்கின்ற பாபங்களைச் செய்தல் என்பதே உண்டாகாது, நடுத்தரமான ப்ரபந்நர்களுக்கு வருந்துதல் மற்றும் ப்ராயச்சித்தம் ஆகியவை உண்டாகும், கடினமான மனம் கொண்டவர்களுக்குச் சிறிய தண்டனைகள் உண்டாகும்.