Srimad Rahasyatrayasaram - ஸம்ப்ரதாய ப்ரக்ரியா பாகம் – 29.சரம ச்லோக அதிகாரம் (பத்தி 116)
ஸம்ப்ரதாய ப்ரக்ரியா பாகம் – 29.சரம ச்லோக அதிகாரம்
அறிந்து செய்ததும், ப்ராயச்சித்தம் செய்யப்படாததும் உண்டான பாபத்தால் நேரிடும் துன்பங்களை கர்மபலன் என்று கூறக்கூடாது
மூலம் – வசந பல ஸித்தமாய் புத்தி பூர்வ உத்தராக பலமான உபக்லேச வர்க்கத்தைப் ப்ராரப்த கர்ம விசேஷ பலமென்று நிஷ்கர்ஷிக்க விரகில்லை. இவை யதா ஸம்பவம் உபயவித கர்மத்தாலும் வரும். ஆகையாலேயிறே புத்தி பூர்வ உத்தராகத்துக்கு ஸாத்விகர் அஞ்சிப்போருகிறது. இங்ஙனல்லாதபோது புந:ப்ரபத்தி விதாயக சாஸ்த்ரமும் அப்படிக்கு சிஷ்டாநுஷ்டாநமும் பூர்வ ஸம்ப்ரதாயமும் விரோதிக்கும்.
– ப்ரபந்நர்கள் தங்களுடைய புத்தி அறிந்து செய்கின்ற பாபங்களால் உண்டாகும் பலன்கள் அனைத்தும், அவர்களுடைய “பலன் அளிக்கத் தொடங்கிவிட்ட பூர்வகர்மங்கள்” என்று உறுதியாகக் கூறுவதற்கு எந்தவிதமான ப்ரமாண ஆதாரங்களும் இல்லை. இவை இந்த இரண்டுவிதமான கர்மங்களாலும் உண்டாகலாம். இந்தக் காரணத்தால்தான் ஸாத்விகமான தன்மை கொண்டவர்கள் புத்தி அறிந்து செய்கின்ற பாபங்களுக்கு அஞ்சுகிறார்கள். இவ்விதம் கொள்ளவில்லையென்றால், மீண்டும் ப்ரபத்தி என்னும் ப்ராயச்சித்தம் செய்வதை விதிக்கும் சாஸ்த்ரங்களும், அவ்விதம் செய்பவர்களுடைய செயல்களும், இதுவரை இதனைப் பின்பற்றி வந்த வழக்கங்களும் முரணாகிவிடும்.