Srimad Rahasyatrayasaram - ஸம்ப்ரதாய ப்ரக்ரியா பாகம் – 29.சரம ச்லோக அதிகாரம் (பத்தி 111)

ஸம்ப்ரதாய ப்ரக்ரியா பாகம் – 29.சரம ச்லோக அதிகாரம்

சரணாகதி கத்யத்தின் சூர்ணை மூலமாக “ஸர்வபாப” என்பதை விளக்குதல்

மூலம் – இவ்விடத்தில், ப்ரபத்தி காலத்துக்கு முன்புள்ளவற்றை “க்ருதாந்” என்றெடுத்துப் பின்புள்ளவற்றை “கரிஷ்யமாணாந்” என்று சொல்லா நின்றது; ப்ரபத்தி காலத்தில் பண்ணுவன சில பாபங்கள் காண்கிறோம், இப்படியிருக்கக் க்ரியமாணங்களை க்ஷமிக்கையாவது ஏன் என்னில், “ப்ராரப்தோபரி ஸமாப்தச்ச வர்த்தமாந:” என்கிற ப்ரக்ரியையாலே ப்ரபத்திக்கு முன்பே தொடங்கிப் பின்பே தலைக்கட்ட வேண்டும்படி சிரகால ஸாத்யமாயிருக்குமவற்றையும் தத்க்ஷணத்தில் ப்ராமாதிகங்களையும் இங்கு க்ரியமாணங்களென்கிறது. கரிஷ்யமாணங்களாவன பின்பு தொடங்குமவை. இப்படி க்ரியமாண ஏகதேசங்களாயும், கரிஷ்யமாணங்களாயுமுள்ள உத்தராகத்தில் புத்தி பூர்வகமல்லாதவை, ஈச்வரன் க்ஷமிக்க ச்லேஷியாதே போம். புத்தி பூர்வகங்களானவை ப்ரபந்நனுக்கு “ப்ராயச்சித்திரியம் ஸாத்ர யத் புந: சரணம் வ்ரஜேத்” என்கையாலே புந: ப்ரபத்தியாலே சமிக்கும்.

– எம்பெருமானார் சரணாகதி கத்யத்தில், “க்ருதாந்” என்னும் சொல் மூலம் ப்ரபத்திக்கு முன்பு செய்த பாபங்களையும், “கரிஷ்யமாணாந்” என்னும் சொல் மூலம் ப்ரபத்திக்குப் பின்னர் செய்யக்கூடும் என்னும் பாபங்களையும் உரைத்தார். ஆனால் இங்கு ப்ரபத்தி நேரத்தில் செய்யக்கூடிய பாபங்களை நாம் பொதுவாகக் காண்பதில்லை; இவ்விதம் உள்ளபோது இங்கு “க்ரியமாணாந்” என்று நிகழ்காலத்தில் உள்ளதாகக் கூறி, அதனைப் பொறுக்கவேண்டும் என்று உரைப்பதன் கருத்து என்ன? அதாவது, ப்ராரப்தோபரி ஸமாப்தச்ச வர்த்தமாந: - தொடங்கப்பட்டு முடிவடையாமல் இருப்பதே வர்த்தமாநம் ஆகும் – என்று கூறுவதற்கு ஏற்ப, ப்ரபத்திக்கு முன்பு செய்யத் தொடங்கப்பட்டு, அவற்றை முடிப்பதற்கு நீண்ட காலம் ஆகும்விதமாக, அஜாக்ரதையின் விளைவால் ப்ரபத்தியின்போதும் செய்வதாக உள்ள பாப கர்மங்களே “க்ரியமாணங்கள்” எனப்படுகின்றன. “கரிஷ்யமாணாந்” என்பது ப்ரபத்திக்குப் பின்னர் செய்யப்படும் பாபங்கள் ஆகும். இவ்விதம் உள்ளபோது ப்ரபத்திக்குப் பின்னர் செய்யப்படும் பாபங்களிலும், முன்பு தொடங்கப்பட்டு ப்ரபத்தி காலத்தில் செய்யப்படும் பாபங்களிலும், எவை புத்தி அறிந்து செய்யப்படாதவையோ, அவை அனைத்தும் ஈச்வரனால் பொறுக்கப்பட்டு, மீதம் ஏதும் இல்லாமல் அழிந்துவிடும். ப்ரபத்திக்குப் பின்னர் புத்தி அறிந்து செய்யப்படும் பாபங்கள், லக்ஷ்மீ தந்த்ரம் (17-91) - ப்ராயச்சித்திரியம் ஸாத்ர யத் புந: சரணம் வ்ரஜேத் – பாபங்களுக்கான ப்ராயச்சித்தம் செய்யப்படவேண்டும், அத்தகைய ப்ராயச்சித்தமானது மீண்டும் ப்ரபத்தி செய்வதே ஆகும் – என்பதற்கு ஏற்ப மீண்டும் ப்ரபத்தி செய்வதால் தள்ளப்படும். ப்ரபந்நன் அறிந்தே செய்யும் பாபங்கள் குறித்த வாதங்கள் - இத்தகைய பாபங்கள் மோக்ஷத்தைக் கருத்தில் கொண்டு செய்யப்பட்ட ப்ரபத்தியால் விலகும் என்று கூறுவதன் கருத்து