Srimad Rahasyatrayasaram - ஸம்ப்ரதாய ப்ரக்ரியா பாகம் – 29.சரம ச்லோக அதிகாரம் (பத்தி 101)

ஸம்ப்ரதாய ப்ரக்ரியா பாகம் – 29.சரம ச்லோக அதிகாரம்

“வ்ரஜ” என்பது விதிக்கப்படுவதில்லை என்பது போன்ற வாதங்களை மறுத்தல்

மூலம் – இவ்விடத்தில் சிலர் “வ்ரஜ” இத்யாதி விதிகளை அந்யபரங்களாக்கி “யோ அந்யதா ஸந்தமாத்மாநம் அந்யதா ப்ரதிபத்யதே | கிம் தேந ந க்ருதம் பாபம் சோரேணாத்ம அபஹாரிணா”, “யமோ வைவஸ்வதோ ராஜா யஸ்தவைஷ ஹ்ருதி ஸ்தித: | தேந சேதவிவாதஸ்தே மா கங்காம் மா குரூந் கம:”, “ஆத்மதாஸ்யம் ஹரே: ஸ்வாம்யம் ஸ்வபாவம் ச ஸதா ஸ்மர” இத்யாதிகளில் தாத்பர்ய கதிகளையும் பராமர்சியாதே இவற்றைக் கொண்டு சாஸ்த்ர ஜந்ய ஸம்பந்த ஜ்ஞாநமொழிய வேறு முமுக்ஷுவுக்கு அநுஷ்டேயமாயிருப்பதோர் உபாயமில்லை என்பார்கள். இது பக்தி ப்ரபத்த்யாதி விதி ஸ்வாரஸ்ய விருத்தம். ராக ப்ராப்த ச்ரவண மநநங்களாலே ஸித்தமான சாஸ்த்ர ஜந்ய ஜ்ஞாநத்தை விதிக்கவும் வேண்டா.

– இங்கு ஒரு சிலர் “வ்ரஜ” என்பது ஒரு விதிமுறை போன்று விதிப்பது அல்ல என்று கூறுவர். இவர்கள், மஹாபாரதம் உத்யோக பர்வம் (41-37) - யோ அந்யதா ஸந்தமாத்மாநம் அந்யதா ப்ரதிபத்யதே | கிம் தேந ந க்ருதம் பாபம் சோரேணாத்ம அபஹாரிணா – ஸர்வேச்வரனுக்குச் சொந்தமாக உள்ள ஆத்மாவை சுதந்திரமானவன் என்று எண்ணும் ஒருவன் ஆத்மாவைக் களவு செய்தவன் ஆகிறான்; அவன் எத்தகைய பாபங்களைத்தான் செய்யவில்லை - என்றும், மநுஸ்ம்ருதி (6-92) - யமோ வைவஸ்வதோ ராஜா யஸ்தவைஷ ஹ்ருதி ஸ்தித: | தேந சேதவிவாதஸ்தே மா கங்காம் மா குரூந் கம: - ஸூர்யமண்டலத்திலும் இதயத்திலும் வசிக்கின்ற பரமாத்மாவுக்கு விரோதமாக நடல்லாமல் இருந்தால் கங்கைக்கும் குருக்ஷேத்ரத்திற்கும் செல்லவேண்டாம் - என்றும், ஸ்ரீவிஷ்ணுதத்வம் - ஆத்மதாஸ்யம் ஹரே: ஸ்வாம்யம் ஸ்வபாவம் ச ஸதா ஸ்மர – ஆத்மாவானது ஸ்ரீஹரிக்கு இயல்பாகவே அடிமையானது என்று எப்போதும் எண்ணியபடி இருப்பாயாக – என்றும் கூறப்படுகின்ற பல வாக்கியங்களுடைய உண்மையான கருத்தை அறியாமல், இந்த வாக்கியங்கள் மூலமாகவே “சாஸ்த்ரங்கள் மூலமாக அறியப்படுவதான ஜீவாத்மா மற்றும் பரமாத்மா ஸம்பந்தம் என்பதை மட்டும் அறிந்தாலே போதுமானது; முமுக்ஷுவுக்கு வேறு உபாயம் ஏதும் இல்லை” என்று உரைக்கிறார்கள். இது பக்தி மற்றும் ப்ரபத்தி ஆகிய விதிகளுக்கு முரண்பட்ட கருத்தாகும். கேட்டல், சிந்தித்தல் போன்றவற்றால் உண்டாகின்ற சாஸ்த்ர ஞானம் என்பது, விருப்பத்தால் உண்டாகிறதே அல்லாமல், எதனாலும் விதிக்கப்பட்டு வருவதில்லை.