Srimad Rahasyatrayasaram - ஸம்ப்ரதாய ப்ரக்ரியா பாகம் – 29.சரம ச்லோக அதிகாரம் (பத்தி 100)
ஸம்ப்ரதாய ப்ரக்ரியா பாகம் – 29.சரம ச்லோக அதிகாரம்
ஜீவாத்மாவிற்குக் கர்த்ருத்வம் இல்லை என்பதால் தடுக்கப்பட்ட கர்மங்கள் அவனுக்கு ஒட்டாது என்னும் வாதத்திற்கான மறுப்பு
மூலம் – உபபுக்தௌஷத ந்யாயாத் உத்தராபத்ய மர்தநம் அநந்யபர நிர்பாத ச்ருதி ஸ்ம்ருதி சதைர்ஹதம் மந்வாதிகளும், “ஜீவிதாத்யயமாபந்ந யோ அந்நமத்தி யதஸ்தத: | ஆகாச இவ பங்கேந ந ஸ பாபேந லிப்யதே” என்றும், “ப்ரணஸம்சயமாபந்நோ யோ அந்நமத்தி யதஸ்தத: | லிப்யதே ந ஸ பாபேந பத்மபத்ரமிவாம்பஸா” என்றும் நியமித்தார்கள். இது ப்ரஹ்மவித்துக்கும் துல்யமென்னுமிடம் “ஸர்வாந்நாநுமதிச்ச ப்ரணாத்யயே தத் தர்சநாத்” என்கிற ஸூத்ரத்திலே ஸாதிதமாயிற்று. ஆகையால், கர்த்ருத்வம் ஆத்மாவுக்கு இல்லையென்றாதல், பாரதந்த்ர்ய ஞானமாத்ரத்தைக் கொண்டாதல் புத்தி பூர்வோத்தராகம் ஒரு படிக்கும் லெபியாதென்கையும், இத்தைப் பற்றப் புந: ப்ரபதநம் வேண்டாவென்கையும் பரபக்ஷமாம்.
உபபுக்தௌஷத ந்யாயாத் உத்தராபத்ய மர்தநம் அநந்யபர நிர்பாத ச்ருதி ஸ்ம்ருதி சதைர்ஹதம் – “மிகவும் உயர்ந்த மருந்தை உட்கொள்ளும்போது அது வேலை செய்வது போன்று, ப்ரபத்தியானது தன்னைக் கைக்கொண்ட பின்னர் உண்டாகும் பாபங்களை நீக்குகிறது” என்னும் கருத்தானது நூற்றுக்கணக்கான ச்ருதி மற்றும் ஸ்ம்ருதி வாக்கியங்களில் மறுக்கப்பட்டுள்ளது. “எந்த நிலைகளில் விதிமுறைகளை மீறலாம்” என்பதை மநு ஸ்ம்ருதியிலும் (5-104) - ஜீவிதாத்யயமாபந்ந யோ அந்நமத்தி யதஸ்தத: | ஆகாச இவ பங்கேந ந ஸ பாபேந லிப்யதே – பட்டினியால் உயிர் போகும் நிலை ஏற்படும்போது எங்கிருந்தோ வந்த உணவை உட்கொண்டாலும், ஆகாசத்தில் வீசப்படும் உணவு அதில் ஒட்டாதது போன்று, அவனிடம் பாபம் ஒட்டுவதில்லை – என்றும், ப்ரணஸம்சயமாபந்நோ யோ அந்நமத்தி யதஸ்தத: | லிப்யதே ந ஸ பாபேந பத்மபத்ரமிவாம்பஸா - பட்டினியால் உயிர் போகும் நிலை ஏற்படும்போது எங்கிருந்தோ வந்த உணவை உட்கொண்டாலும், தாமரை இலையில் உள்ள நீர் அதில் ஒட்டாதது போன்று, அவனிடம் பாபம் ஒட்டுவதில்லை – என்றும் கூறப்பட்டது. இத்தகைய நிலையானது ப்ரஹ்மத்தை அறிந்தவனுக்கும் பொருந்தும் என்பது ப்ரஹ்மஸூத்ரத்தில் (3-4-28) – ஸர்வ அந்ந அநுமதிச்ச ப்ரணாத்யயே தத் தர்சநாத் - ப்ராணவித்யை உள்ளவனுக்கு, அவன் உயிர் பிரிவதாக இருந்தால் மட்டுமே எந்தவிதமான உணவும் அனுமதிக்கப்படுகிறது – எனப்பட்டது. எனவே ஆத்மாவுக்குக் கர்த்ருத்வம் இல்லை என்பதாலும், ஆத்மா ஸர்வேச்வரன் வசப்பட்டது என்பதாலும், ப்ரபத்திக்குப் பின்னர் அறிந்துகொண்டே செய்யும் பாபங்கள் ஒட்டாது என்பதால் மீண்டும் ப்ராயச்சித்த ப்ரபத்தி செய்யவேண்டாம் என்னும் கருத்து சரியல்ல.