Srimad Rahasyatrayasaram - ஸம்ப்ரதாய ப்ரக்ரியா பாகம் – 29.சரம ச்லோக அதிகாரம் (பத்தி 98)

ஸம்ப்ரதாய ப்ரக்ரியா பாகம் – 29.சரம ச்லோக அதிகாரம்

ஆளவந்தார் செய்த ப்ரபத்திக்கு க்ஷமை கொண்டார் என்பதான கருத்துக்கு மறுப்பு

மூலம் - அந்ய விச்வாஸ ஸித்தயர்த்தம் பக்த்யுபாய விதிம் வதந் ஸர்வசாஸ்த்ரேஷ்வ விச்வாஸம் ஆதத்தே முகபேதத: மத்யோபஹத மாத்ரஸ்த தீர்த்த த்ருஷ்டாந்த வர்ணனம் அஹங்காராந்வயே து ஸ்யாத் ப்ரபத்தாவபி பக்திவத் ஆகையால், “ப்ரஸீத மத் வ்ருத்தம் அசிந்தயித்வ” இத்யாதிகள் முன்பு தாம் பண்ணின ப்ரபத்திக்கு க்ஷமை கொள்ளுகிறபடி என்று சிலர் சொல்லுமதுவும் அஹங்கார ஸ்பர்சாதி சங்கையப் பற்றவாமத்தனை அல்லது யதாசாஸ்த்ரம் அநுஷ்டித்த ப்ரபத்தி அபராதமாய் அதுக்கு க்ஷமை கொள்ளுகிறபடியன்று. அப்படியாகில், “பிதாமஹம் நாதமுனிம் விலோக்ய ப்ரஸீத:” என்கிற பூர்வாசார்ய புரஸ்காராதிகளும் தாம் செய்கிறதாகையாலே, இதுக்கு க்ஷமை கொள்ள வேண்டி அநவஸ்தையாம். இது ஸ்வ பர நிர்வாஹகமாகில் இது போல முன்பு பண்ணின ப்ரபதமும் ஸ்வ பர நிர்வாஹகமென்னலாம். இங்குச் சொல்லும் குதர்க்கங்களாலே பூர்வர்கள் பண்ணின ப்ரபத்தியும் அபராதமாயறுகையாலே, பூர்வர்களை முன்னிடவுமொண்ணாதொழியும். ஆகையால் இஸ் ஸ்தோரத்தில் ஆத்யந்தங்களில் பண்ணின ஆசார்ய புரஸ்காரம் இங்கு அருளிச்செய்கிற ப்ரபத்திக்கு அபேக்ஷிதமாயாதல், வைகல்ய பரிஹாரார்த்தமாயாதல் உபயுக்தமாய் வந்ததித்தனை. இவ் ஆசார்ய புரஸ்காரத்திற்போலே ப்ரபத்யாதிகளிலும் பராதீந கர்த்ருத்வம் தோஷமன்று.

அந்ய விச்வாஸ ஸித்தயர்த்தம் பக்த்யுபாய விதிம் வதந் ஸர்வசாஸ்த்ரேஷ்வ விச்வாஸம் ஆதத்தே முகபேதத: - ப்ரபத்தி என்னும் மற்றொரு உபாயத்தில் விச்வாஸம் உண்டாவதற்காக பக்தி என்னும் உபாயம் குறித்த விதியை உரைப்பவன், அனைத்து சாஸ்த்ரங்களிலும் நம்பிக்கை அற்ற நிலையை உண்டாக்குகிறான். மத்யோபஹத மாத்ரஸ்த தீர்த்த த்ருஷ்டாந்த வர்ணனம் அஹங்காராந்வயே து ஸ்யாத் ப்ரபத்தாவபி பக்திவத் – பக்தியோகத்தை ஒரு சிலர், “மதுவின் கலப்பு காரணமாக அசுத்தமான தண்ணீர்” என்று ஒப்புமை கூறுகிறார்கள்; ஆனால் இத்தகைய ஒப்புமை என்பது பக்தியோகத்தில் அஹங்காரம் கலந்திருந்தால் மட்டுமே பொருந்தும்; இத்தகைய ஒப்புமை என்பது ப்ரபத்தியில் அஹங்காரம் கலந்திருந்தாலும் பொருந்தும். ஆகவே, ஸ்தோத்ரரத்னம் (65) - ப்ரஸீத மத் வ்ருத்தம் அசிந்தயித்வ – எனது செய்கையை ஆராயாமல் என்னை அனுக்ரஹிக்கவேண்டும் – என்று ஸ்வாமி ஆளவந்தார் கூறுவது, தாம் முன்பு செய்த ப்ரபத்திக்கான மன்னிப்பே ஆகும் என்று சிலர் கூறுகிறார்கள்; ஆனால் ஆளவந்தார் இவ்விதம் உரைத்தல் என்பது அத்தகைய ப்ரபத்தியின்போது தனக்கு அஹங்காரம் கலந்திருக்கலாம் என்னும் எண்ணத்தாலேயே ஆகும் அல்லாமல், சாஸ்த்ரங்களால் கூறப்பட்ட ப்ரபத்தியைச் செய்தது குற்றம் ஆகும் என்னும் எண்ணத்தால் அல்ல. இவ்விதம் பொருள் கொண்டால் (அதாவது குற்றம் என்று கொண்டால்), ஸ்தோத்ரரத்னம் (65) - பிதாமஹம் நாதமுனிம் விலோக்ய ப்ரஸீத: - எனது பாட்டனாராகிய நாதமுனிகளுக்காக – என்று தன்னுடைய பூர்வாசார்யர்களை முன்னிறுத்தி விண்ணப்பம் செய்தது குற்றமே ஆகும் என்று எல்லையற்ற சுழற்சி உண்டாகும். “இவ்விதம் விண்ணப்பம் செய்தல் என்பது இதனால் ஏற்படும் பாபம் மற்றும் இதற்கு முன்பாக செய்தப் பாபங்கள் ஆகிய அனைத்தையும் நீக்குவதற்காகவே ஆகும்” என்று கூறினால், இதே போன்று ப்ரபத்தி என்பதும் அதனால் ஏற்படும் பாபம் மற்றும் இதற்கு முன்பாக செய்தப் பாபங்கள் ஆகிய அனைத்தையும் நீக்குவதற்காகவே ஆகும் என்று உரைக்கலாம் அல்லவோ? இப்படியாகத் தவறான வாதங்களை ஏற்றுக் கொண்டால், பூர்வாசார்யர்களும் ப்ரபத்தியைச் செய்ததால் பாபம் நிறைந்தவர்களே ஆவார்கள் என்பதால், அவர்களுக்கு மரியாதை அளித்தல் என்பது சரியல்ல என்றாகிவிடும். ஆகவே இந்த ச்லோகத்தின் தொடக்கம் மற்றும் இறுதி ஆகியவற்றில் ஆளவந்தார் தனது பூர்வாசார்யர்களிடம் செய்த விண்ணப்பம் என்பது ப்ரபத்தியின் ஒரு அங்கம் என்பதாலோ அல்லது தான் முன்பு செய்த ப்ரபத்தியில் உள்ள குறைகளை நீக்குவதற்காகவோ ஆகும். இவ்விதம் ஆசார்யர்களை முன்னிறுத்திச் செய்வது போன்று ப்ரபத்தியிலும் வேறு ஒருவருடைய (பகவான்) எண்ணத்தை அடியாக்கிக் கொண்டு செய்வதில் தோஷம் இல்லை.