Srimad Rahasyatrayasaram - ஸம்ப்ரதாய ப்ரக்ரியா பாகம் – 29.சரம ச்லோக அதிகாரம் (பத்தி 96)

ஸம்ப்ரதாய ப்ரக்ரியா பாகம் – 29.சரம ச்லோக அதிகாரம்

ஜீவனுக்கு ப்ரபத்தியை விதிப்பது பொருந்தாது என்ற கருத்துக்குக் கண்டனம்

மூலம் – இப்படி ஸர்வவிஷய ஸாதாரண கர்த்ருத்வமுடைய ஈச்வரனடியாக ஜீவனுக்கு ஸ்வபுத்தி பூர்வ ப்ரவ்ருத்தி சக்தி ரூபமான நியோக யோக்யத்வம் ஸித்தமாகையாலே, இங்கு “வ்ரஜ” என்று விதிக்கக் குறையில்லை.

– இவ்விதம் பொதுவாகவே அனைத்து விஷயங்களிலும் கர்த்தாவாக உள்ள ஈச்வரனுக்கு அடங்கியபடி உள்ள ஜீவாத்மா, தனது புத்தி அறிந்து ஒன்றைச் செய்யக்கூடிய சக்தி கொண்டவன் என்பதால், அவனைக் குறித்து கீதை (18-66) – வ்ரஜ – சரணம் அடைவாயாக – என்று விதிப்பதில் தவறில்லை.