Srimad Rahasyatrayasaram - ஸம்ப்ரதாய ப்ரக்ரியா பாகம் – 29.சரம ச்லோக அதிகாரம் (பத்தி 88)

ஸம்ப்ரதாய ப்ரக்ரியா பாகம் – 29.சரம ச்லோக அதிகாரம்

“ஏக” என்ற பதமானது பெரியபிராட்டி உபாயமாக உள்ளதை விலக்குவதில்லை என்னும் விளக்கம்

மூலம் – (1) கேசித் து இஹ ஏக சப்தார்த்தம் சரண்ய ஐக்யம் ப்ரசக்ஷதே விசிநஷ்டி ததா அபி ஸ்ரீ: குணவிக்ரஹவத் ப்ரபும் (2) ஈச்வரீ ஸர்வபூதாநாம் இயம் பகவத: ப்ரியா ஸம்ச்ரித த்ராண தீக்ஷாயாம் ஸஹதர்மசரீ ஸ்ம்ருதா (3) ஏகம் ஜகத் உபாதாநம் இதி உக்தே ப்ரமாணத: யதா அபேக்ஷித வைசிஷ்டயம் ததா அத்ராபி பவிஷ்யதி (4) ஏக உபாஸித விதாநே அபி குணதீநாம் யதா அந்வய: தத் ஏக சரண வ்ரஜ்யா விதாநே அபி அநுமந்யதாம் (5) ததா குணாதி வைஷ்டயே ஸித்தோபாய ஐக்யம் அக்ஷதம் ஏவம் பத்நீ விசிஷ்டத்வே அபி அபீஷ்டம் சாஸ்த்ர சக்ஷுணாம் (6) ப்ரபா ப்ரபாவதோ: யத்வத் ஏக உக்தௌ இதர அந்வய: ஏவம் அந்யதர உக்தௌ ஸ்யாத் ஸஹவ்ருத்தி அபிதாநத: (7) ஸ்மரந்தி ச ஏநாம் முநய: ஸம்ஸார அர்ணவ தாரிணீம் ஊசது: ஸ்வயம் அபி ஏதத் ஸாத்வதாதிஷு தாவுபௌ (8) உபாய உபேய தசயோ: த்வயே அபி ஸ்ரீ: ஸமந்விதா இஷ்டா ச சேஷிணி த்வந்தே சேஷ வ்ருத்தி: யதா உசிதா (9) அத: அநந்யபர அநேக ச்ருதி ஸ்ம்ருதி அநுஸாரத: பத்நீ விசிஷ்ட ஏவ ஏக: ப்ரபத்தவ்ய இஹ உதித:

(1) ஆனால் ஒரு சிலர், சரமச்லோகத்தில் உபாயமாக உள்ள வஸ்து ஒன்றாக இருத்தல் என்பதையே “ஏக” என்னும் சொல் உணர்த்துவதாகக் கூறுகிறார்கள். இவ்விதம் கொண்டாலும், ஸர்வேச்வரனுடைய கல்யாணகுணங்கள் மற்றும் அவனுடைய திருமேனி போன்றவை அவனுக்கு எவ்விதம் விசேஷணங்களாக (விசேஷணம் என்றால் ஒரு பொருளை மற்றவற்றிலிருந்து தனித்து உணர்த்தக்கூடிய தன்மைகள்) உள்ளனவோ, அது போன்றே பெரியபிராட்டியும் நின்று, உபாயமாக உள்ளாள் என்றே கொள்ளவேண்டும். (2) அனைத்து உயிர்களுக்கும் ஈச்வரரியும், ஸர்வேச்வரனுக்கு ப்ரியமானவளும் ஆகிய இந்தப் பெரியபிராட்டி, அவனுடைய “அடியார்களைக் காப்பாற்றுதல்” என்னும் விரதத்தில் அவனுடன் சேர்த்து நின்று, அத்தகைய தர்மத்தைச் செய்கிறாள் என்று கூறப்படுகிறாள். (3) இந்த ஜகத்தின் உபாதானக் காரணம் என்பது ஒரே வஸ்துவே (ப்ரஹ்மம்) ஆகும் என்று கூறப்பட்டுள்ளது. ஆனாலும், ஸூக்ஷ்மமான சித் மற்றும் அசித் ஆகியவற்றுடன் ப்ரஹ்மம் சேர்ந்திருந்தல் என்பது எவ்விதம் ப்ரமாணங்களால் காண்பிக்கப்படுகிறதோ, அதே போன்று, பெரியபிராட்டி விஷயத்திலும் உண்டு. (4) ஒருவனை மட்டுமே உபாஸிக்கவேண்டும் என்று கூறப்பட்டாலும், குணம் முதலானவற்றுக்கும் எவ்விதம் உபாஸனையில் ஸம்பந்தம் ஏற்கப்படுகிறதோ அது போன்று, இவளுடைய ஸம்பந்தமும் ஏற்கப்படவேண்டும். (5) ஸித்தோபாயத்திற்கு (ஸர்வேச்வரனுக்கு) எவ்விதம் குணம் முதலானவற்றுடன் சேர்ந்திருப்பதில் தடை இல்லையோ அது போன்றே, பெரியபிராட்டியுடன் சேர்ந்திருப்பதும் சாஸ்த்ரங்களை மட்டுமே கண்ணாகக் கொண்டவர்களுக்கு விருப்பமானதே ஆகும். (6) ஒளி மற்றும் ஒளியுடன் கூடிய பொருள் ஆகிய இரண்டினுள் ஏதேனும் ஒன்றைக் கூறினாலே மற்றொன்றின் ஸம்பந்தம் எவ்விதம் தானாகவே வெளிப்படுகிறதோ அது போன்றே, ஸர்வேச்வரன் மற்றும் பெரியபிராட்டி ஆகியோர்களில் ஒருவரைக் கூறினால் மற்றவரும் கூறப்பட்டவர் ஆகிறார். (7) ஸம்ஸாரம் என்னும் ஸமுத்ரத்தைக் கடக்க வைப்பவளாக பெரியபிராட்டியார் உள்ளதை முனிவர்கள் ஸ்ம்ருதிகளில் கூறுகிறார்கள். இந்த விஷயத்தை ஸர்வேச்வரனும் பெரியபிராட்டியும் ஸாத்வத ஸம்ஹிதை போன்றவற்றில் தாங்களே உரைத்தனர். (8) த்வய மந்த்ரத்தில், எஜமானர்களாகிய இந்த இருவரிடமும் எவ்விதம் கைங்கர்யமானது ஏற்றுக் கொள்ளப்பட்டு, பொருத்தமாக உள்ளதோ அது போன்றே, ஸர்வேச்வரன் உபாயம் மற்றும் உபேயமாக உள்ள இரண்டு நிலைகளிலும் பெரியபிராட்டியும் சேர்ந்தே உள்ளாள். (9) எனவே மற்ற பொருளைக் குறித்து உரைக்கின்ற குறிக்கோள் ஏதும் இல்லாத பல ச்ருதிகள் மற்றும் ஸ்ம்ருதிகள் ஆகியவற்றைப் பின்பற்றியே, “ஒருவனாக உள்ள ஸர்வேச்வரன் பெரியபிராட்டியுடன் கூடியவனாகவே ப்ரபத்தி செய்யப்பட வேண்டியவன்” என்று இந்தச் சரம ச்லோகம் கூறுகிறது.