Srimad Rahasyatrayasaram - ஸம்ப்ரதாய ப்ரக்ரியா பாகம் – 29.சரம ச்லோக அதிகாரம் (பத்தி 87)
ஸம்ப்ரதாய ப்ரக்ரியா பாகம் – 29.சரம ச்லோக அதிகாரம்
“ஏக” என்பதன் ஆறு பொருள்களுடைய சுருக்கம்
மூலம் – (1) ப்ராப்யஸ்ய ஏவ ப்ராபகத்வம் ஸ்வப்ரதாந்ய நிவாரணம் ப்ரபத்தே: வ்யாஜமாத்ரத்வம் அந்ய உபாயை: அநந்வய: (2) தத் அங்கைரபி அஸம்பந்த: ஸர்வ ஸாத்யேஷு அபிந்நதா இத்தம் அர்த்தா: ஷடாசார்யை: ஏக சப்தஸ்ய தர்சிதா:
– (1) அடையப்படவேண்டிய இலக்காக உள்ள ஸர்வேச்வரனே, அந்த இலக்கை அடைய வைக்கின்ற உபாயமாகவும் இருத்தலை உணர்த்துதல்; ஜீவாத்மா தானும் உபாயத்தில் பங்கு வகிப்பவன் என்று தன்னை முக்கியமாக எண்ணிவதைத் தடுத்தல்; ப்ரபத்தி என்பது ஒரு வ்யாஜம் (வாய்ப்பு எனலாம்) மட்டுமே என்று உணர்த்துதல்; மற்ற உபாயங்களுடன் ஸம்பந்தம் இல்லாமல் இருத்தல்; (2) மற்ற உபாயங்களின் அங்களுடனும் ஸம்பந்தம் இல்லாமல் இருத்தல்; அனைத்து பயன்களையும் தான் மட்டுமே அளிக்கவல்லதாக உள்ள தன்மை ஆகிய ஆறு பொருள்கள் “ஏக” என்னும் சொல்லிற்கு உள்ளதாக ஆசார்யர்களால் உணர்த்தப்பட்டது.