Srimad Rahasyatrayasaram - ஸம்ப்ரதாய ப்ரக்ரியா பாகம் – 29.சரம ச்லோக அதிகாரம் (பத்தி 83)
ஸம்ப்ரதாய ப்ரக்ரியா பாகம் – 29.சரம ச்லோக அதிகாரம்
பகவானே அனைத்து பலன்களுக்கும் ஸாதனம் என்பதை “ஏக” சப்தம் உணர்த்துகிறது
மூலம் – “ஸர்வதர்மாந்” என்கிற கீழில் “ஸர்வ” சப்தத்தையும், “ஸர்வபாபேப்யோ” என்கிற மேலில் “ஸர்வ” சப்தத்தையும் பார்த்து, இவ் ஏக சப்தம் “ஸர்வ” சப்தத்துக்கு ப்ரதிஸம்பந்தியாய் நிற்கிறதென்றும் சொல்லுவார்கள். அப்போது, “ஸுதுஷ்கரேண சோசேத் யோ யேந யேந இஷ்டஹேதுநா | ஸ ஸ ஸத்யாஹமேவேதி சரம ச்லோக ஸங்க்ரஹ:”.
– சரமச்லோகத்தின் முதல் வரியில் உள்ள “ஸர்வதர்மாந்” என்பதில் உள்ள “ஸர்வ” என்னும் சொல், இரண்டாவது வரியில் உள்ள “ஸர்வபாபேப்யோ” என்பதில் உள்ள “ஸர்வ” என்னும் சொல் ஆகிய இரண்டையும் ஆராய்ந்த பின்னர், “ஏக” என்னும் சொல்லானது, “ஸர்வ” என்பதற்கு எதிராக உள்ளது என்று சிலர் கூறுவர். இவ்விதம் கொண்டால், ஸுதுஷ்கரேண சோசேத் யோ யேந யேந இஷ்டஹேதுநா | ஸ ஸ ஸத்யாஹமேவேதி சரம ச்லோக ஸங்க்ரஹ: - யார் ஒருவன் தன்னால் செய்வதற்கு மிகவும் அரிதாக உள்ள உபாயத்தைக் கைக்கொள்ள இயலாத காரணத்தால் வருத்தம் அடைவானோ, அவனுக்கு அந்த உபாயமாக நானே உள்ளேன் என்பதே கருத்தாகிவிடும்.