Srimad Rahasyatrayasaram - ஸம்ப்ரதாய ப்ரக்ரியா பாகம் – 29.சரம ச்லோக அதிகாரம் (பத்தி 82)

ஸம்ப்ரதாய ப்ரக்ரியா பாகம் – 29.சரம ச்லோக அதிகாரம்

ப்ரபத்திக்கு அங்கமாக உள்ளவற்றை அல்லாமல் வேறு எதனையும் அங்கமாக எதிர்பாராமை என்பதை “ஏக” சப்தம் கூறுகிறது

மூலம் – ஸபரிகர ப்ரபத்திக்கு உபாஸநாதிகளான அங்கிகளையும், இவற்றின் பரிகரங்களான தர்மாந்தரங்களையும் கழிக்கிற இப்பொருள்களில் இவ் ஏக சப்தம் சரண்யனை விசேஷித்தபடி என்னென்னில், அகிஞ்சநன் பக்கலிலே இவை ப்ரஸாதநமாய்க் கொண்டு, சரண்யனோடு துவக்கற்றமை காட்டுகைக்காக “மாம் ஏகம்” என்கிறது.

– ஆனால், “ஏக” என்பது ப்ரபத்தியைக் குறிப்பதாகவே இருக்கவேண்டும் என்னும்போது, அது சரணம் அடையத்தக்கவனாக உள்ள ஸர்வேச்வரனைக் குறித்து உள்ளதாக எவ்விதம் கூறலாம் என்னும் கேள்விக்கு விடை அளிப்போம். மற்ற உபாயங்கள் ஏதும் இன்றி உள்ள ஒருவனுக்கு, ப்ரபத்தி தவிர உள்ள மற்ற எந்தவிதமான தர்மங்களும் ஈச்வரனுடைய உபாஸனையாக இருப்பதில்லை என்பதையே, “மாம் ஏகம்” என்பது உணர்த்துகிறது.