Srimad Rahasyatrayasaram - ஸம்ப்ரதாய ப்ரக்ரியா பாகம் – 29.சரம ச்லோக அதிகாரம் (பத்தி 80)
ஸம்ப்ரதாய ப்ரக்ரியா பாகம் – 29.சரம ச்லோக அதிகாரம்
ப்ரபத்திக்கு அங்கமாக உள்ளவற்றை அல்லாமல் வேறு எதனையும் அங்கமாக எதிர்பாராமை என்பதை “ஏக” சப்தம் கூறுகிறது
மூலம் – “தத: ஸாகர வேளாயாம் தர்மாந் அஸ்தீர்ய ராகவ: | அஞ்ஜலிம் ப்ராங்முக: க்ருத்வா ப்ரதிசிச்யே மஹோததே: || பாஹும் புஜகா போகாபம் உபதாயாரிஸூதந:” என்று பெருமாள் ஸமுத்ரத்தைப் பற்ற சரணாகதி பண்ணினவிடத்திலும், “ஸ ராஜா பரமாபந்நோ தேவச்ரேஷ்டமகாத்ததா | சரண்யம் ஸர்வபூதேசம் பக்த்யா நாராயணம் ஹரிம் || ஸமாஹிதோ நிராஹார: ஷட் ராத்ரேண மஹாயசா: | ததர்சாதர்சிநே ராஜா தேவம் நாராயணம் ப்ரபும்” என்று ஸப்த வ்யாயோபாக்யாநத்திலே ப்ரஹ்மதத்த சரிதத்திலும் சொன்ன ப்ரகாரங்களுமெல்லாம் ப்ரபத்திக்கு அங்கமல்ல. இவ்விரண்டிடமும் ஸபரிகர ப்ரதிசயநாதி ப்ரதாநமாகையாலே, அங்கு அந்த நியமங்கள் சொல்ல ப்ராப்தம். இப்படி ஸுக்ருத ப்ரணாமத்திலும் கண்டு கொள்வது.
– இராமாயணம் யுத்தகாண்டம் (21-1, 2) - தத: ஸாகர வேளாயாம் தர்மாந் அஸ்தீர்ய ராகவ: | அஞ்ஜலிம் ப்ராங்முக: க்ருத்வா ப்ரதிசிச்யே மஹோததே: || பாஹும் புஜகா போகாபம் உபதாயாரிஸூதந: - விரோதிகளை வெல்பவனாகிய இராமன், கடற்கரையில் தர்ப்பங்களைப் படுக்கை போன்று விரித்து, ஸர்ப்பத்தின் சரீரம் போன்ற தனது கையைத் தலையணையாக வைத்துக் கொண்டு, கைகளைக் குவித்தபடி, ஸமுத்ரராஜனின் வருகையை எதிர்நோக்கி, கிழக்குமுகமாகச் சயனித்தான் – என்று இராமன் ஸமுத்ர அரசனிடம் சரணாகதி பண்ணிய இடம் மற்றும் ஹரிவம்சம் (27-11-13) - ஸ ராஜா பரமாபந்நோ தேவச்ரேஷ்டமகாத்ததா | சரண்யம் ஸர்வபூதேசம் பக்த்யா நாராயணம் ஹரிம் || ஸமாஹிதோ நிராஹார: ஷட் ராத்ரேண மஹாயசா: | ததர்சாதர்சிநே ராஜா தேவம் நாராயணம் ப்ரபும் – மிகுந்த ஆபத்தில் இருந்த அந்த அரசன் (இவன் ப்ரஹ்மதத்தன் என்பவன் ஆவான்) தேவர்களில் உயர்ந்தவனும், காப்பவனும், அனைத்து ஜீவராசிகளுக்கும் தலைவனும் ஆகிய நாராயணனை, பக்தியுடன் சரணம் புகுந்தான்; ஆறு இரவுகள் உணவு உண்ணாமல் இருந்த அந்த அரசன், நாராயணனை த்யானத்தால் கண்டான் – என்றுள்ள நிகழ்வில் காணப்படும் ப்ரஹ்மதத்த சரிதத்தில் கூறப்பட்ட உபவாசம் போன்றவை ப்ரபத்திக்கு அங்கம் அல்ல. இந்த இரண்டு இடங்களிலும், இறக்கும்வரை உபவாசம் இருத்தல் என்னும் செயலே முக்கியமானதாக உள்ளதால், அத்தகைய விதிமுறைகள் பொருத்தமே ஆகிறது. இது போன்றே ஸுக்ருத ப்ரணாமத்திலும் பொருந்தும் (ஸுக்ருத ப்ரணாமம் – இரண்டு கைகள் கொண்டு மூன்று முறை அஞ்ஜலி செய்து, முழங்கால் முடிய கைகளை நீட்டி, நெற்றி மூக்கு கன்னம் ஆகியவற்றால் மூன்று முறை பூமியைத் தொட்டு, ஸாஷ்டாங்கமான நமஸ்காரத்தைப் பன்னிரண்டு முறைகள் செய்வது ஆகும்).