Srimad Rahasyatrayasaram - ஸம்ப்ரதாய ப்ரக்ரியா பாகம் – 29.சரம ச்லோக அதிகாரம் (பத்தி 77)

ஸம்ப்ரதாய ப்ரக்ரியா பாகம் – 29.சரம ச்லோக அதிகாரம்

ப்ரபத்திக் குறித்து மிகைப்படுத்தப்பட்ட வாதங்களுக்கான மறுப்பு

மூலம் – ஆகையால் ஈச்வரன் ப்ரஸாதநீயனாய்ப் ப்ரதாநமான ஸித்தோபாயம், பக்தி ப்ரபத்திகள் இரண்டும் ப்ரஸாதநங்களாய்க் கொண்டு ப்ரதாநமல்லாத ஸாத்யோபாயங்கள், இவையிரண்டத்தொன்றிலே யதாதிகாரம் நிலையாகக் கடவது.

– ஆகவே ஈச்வரனே வணங்குவதற்குரிய இலக்காகவும், முதன்மையான ஸித்தோபாயமும் ஆகிறான். எனவே பக்தி மற்றும் ப்ரபத்தி ஆகிய இரண்டும் முதன்மையாக அல்லாத ஸாத்யோபாயங்கள் என்றாகின்றன. முமுக்ஷு ஒருவன் தனது தகுதிக்கு ஏற்ப இந்த இரண்டில் ஏதேனும் ஒன்றில் நிலை நிற்கவேண்டும்.