Srimad Rahasyatrayasaram - ஸம்ப்ரதாய ப்ரக்ரியா பாகம் – 29.சரம ச்லோக அதிகாரம் (பத்தி 74)

ஸம்ப்ரதாய ப்ரக்ரியா பாகம் – 29.சரம ச்லோக அதிகாரம்

ப்ரபத்திக் குறித்து மிகைப்படுத்தப்பட்ட வாதங்களுக்கான மறுப்பு

மூலம் – அநிவாரணமாத்ரமென்றது விலக்காத மாத்ரமானால், ரக்ஷகனான ஈச்வரனை இவன் முன்பு ப்ரபலனாய் விலக்கினானாகில், ஈச்வரனுடைய ஈச்வரத்வம் ஸங்குசிதமாம். அபராதத்தாலே நிக்ரஹத்தையுண்டாக்கி விலக்கினானாகில், இவன் பண்ணுகிற ப்ரபத்தி ப்ரஸாதநமேயாக வேண்டும். ஸ்வரக்ஷணார்த்த வ்யாபாரத்தாலே விலக்கினானென்னில், நிர்வ்யாபாரமான ஸுஷுப்தி ப்ரளயாத்யவஸ்தைகளிலும் வ்யாபரிக்க யோக்யனாயிருக்கிற ஜாக்ரத் தசையில் விலக்காதேயிருக்கும்போதும், ஈச்வரன் மோக்ஷ ப்ரதாநம் பண்ணப் பார்க்கும்.

– ப்ரபத்தி என்பது பகவானுடைய கருணையைத் தடுக்காமல் இருத்தல் மட்டுமே ஆகும் என்று கூறினால், அவனால் அதிக வலிமை காரணமாக பகவானுடைய செயலையே தடுக்க இயல்கிறது என்றும், பகவானுடைய ஈச்வரத்தன்மை குறைவாக உள்ளது என்றும் பொருளாகிவிடும். “கருணையைத் தடுத்தல்” என்பது, பகவானுடைய ஆணையை மதிக்காமல் ஒரு தவறு செய்துவிட்டு, அதற்கான தண்டனையை தன்னிசையாக ஏற்பதற்காகவே ஆகும் என்று கூறினால், ப்ரபத்தி என்பது ப்ராயச்சித்தம் என்பது போன்றாகிவிடும். “கருணையைத் தடுத்தல்” என்பது தன்னைத் தானே காப்பாற்றிக் கொள்ள முயல்வதால் ஆகும் என்று கூறினால், எந்தவிதமான செயல்களும் இல்லாத நிலைகளான ஆழ்ந்த உறக்கம் மற்றும் ப்ரளயம் ஆகிய காலங்களிலும், செயல்கள் செய்ய முடிந்த விழிப்பு நிலையிலும் செயல் செய்யாமல் உள்ள காலங்களிலும், பகவான் இவனுக்கு மோக்ஷம் அளிக்க முனைவான் என்றாகும்.