Srimad Rahasyatrayasaram - ஸம்ப்ரதாய ப்ரக்ரியா பாகம் – 29.சரம ச்லோக அதிகாரம் (பத்தி 65)

ஸம்ப்ரதாய ப்ரக்ரியா பாகம் – 29.சரம ச்லோக அதிகாரம்

“மாம்” என்னும் சொல்லின் விளக்கம்

மூலம் – இங்கே “நிகரில் புகழாய்” இத்யாதிகளிற் சொல்லுகிற வாத்ஸல்ய ஸ்வாமித்வ ஸௌசீல்ய ஸௌலப்ய ரூபமான இக்குண சதுஷ்டயமும் அடியிலே அஸ்தாந ஸ்நேஹாதிகளாலே கலங்கின அர்ஜுநனை அநாதரியாமையாலும், “மத்த: பரதரம் நாந்யத்” என்று தானே அருளிச்செய்கையாலும், “ஹே க்ருஷ்ண ஹே யாதவ”, “ரதம் ஸ்தாபய மே அச்யுத” என்னும்படி நின்று ஸாரத்யாதிகளைப் பண்ணுகையாலும், “காணவேண்டும்” என்ன ஸ்வவைச்வரூபத்தைக் காட்ட, “மீண்டும் பழைய ஸௌம்ய விக்ரஹத்தைக் காட்டவேண்டும்” என்ன அப்போதே ஸாரதிரூபனாய்த் தோற்றி நிற்கையாலும் வ்யஞ்சிதமாயிற்று.

– “மாம்” என்னும் சொல் மூலம் திருவாய்மொழி (6-10-1) – நிகரில் புகழாய் – என்பது போன்றவற்றில் கூறப்படுவதான வாத்ஸல்யம், ஸ்வாமியாக உள்ள தன்மை, ஸௌசீல்யம் மற்றும் ஸௌலப்யம் ஆகிய நான்கு குணங்களும் வெளிப்படுகின்றன. எப்படி? சிநேகம் வரக்கூடாத இடமான யுத்தகளத்தில் கலங்கி நின்ற அர்ஜுனனைக் கைவிடாமல் இருத்தல்; கீதை (7-7) - மத்த: பரதரம் நாந்யத் – என்னைக் காட்டிலும் உயர்ந்தது ஏதும் இல்லை – என்று தானே அருளிச்செய்தல்; கீதை (11-41) - ஹே க்ருஷ்ண ஹே யாதவ – என்றும், கீதை (1-21) - ரதம் ஸ்தாபய மே அச்யுத – தேரை அங்கே எனக்காக நிறுத்துவாயாக – என்றும் அர்ஜுனன் கூறுவதற்கு ஏற்ப தேர் ஓட்டுதல் முதலானவற்றைச் செய்தல்; “உன்னுடைய உண்மையான ரூபத்தைக் காணவேண்டும்” என்று அர்ஜுனன் கேட்டபோது தனது விச்வரூபத்தைக் காண்பித்தும், “மீண்டும் உன்னுடைய அழகான திருமேனியையே காண்பிக்கவேண்டும்” என்று கூறியவுடன் தேர் ஓட்டுபவனாக நிற்கும் ரூபத்தைக் காண்பித்தல் – இது போன்ற பலவற்றாலும் வெளிப்பட்டது.