Srimad Rahasyatrayasaram - ஸம்ப்ரதாய ப்ரக்ரியா பாகம் – 29.சரம ச்லோக அதிகாரம் (பத்தி 63)
ஸம்ப்ரதாய ப்ரக்ரியா பாகம் – 29.சரம ச்லோக அதிகாரம்
க்ருஷ்ணனின் அவதார ரஹஸ்யம்
மூலம் – இப்படி அகிஞ்சநனான அதிகாரிக்கு யதாவிதி ரக்ஷாபேக்ஷா பூர்வக பரந்யாஸத்தையொழிய வேறொன்றால் அபேக்ஷையில்லாத ஸித்தோபாயத்தை “மாம் ஏகம்” என்று காட்டி, அதினுடைய வசீகரணார்த்தமான ஸாத்யோபாயத்தை “சரணம் வ்ரஜ” என்று விதியாலே காட்டுகிறது. இப்படி விதிக்கிற ப்ரபத்தி ரூப வித்யைக்கு, சரண்ய ப்ரஸாதநமாகச் சோதிதத்வத்தாலே வருகிற உபாயத்வம் பக்தியோக துல்யம்; இதனாலே ப்ரஸந்நனான ஈச்வரன் மோக்ஷத்துக்கு ஸாக்ஷாதுபாயம்.
– வேறு கதியில்லாத அதிகாரி ஒருவனுக்கு, தகுந்த விதிப்படி “என்னைக் காக்கவேண்டும்” என்னும் விண்ணப்பத்தை முன்னிறுத்தி, தனது பாரங்களை அவனிடம் சமர்ப்பணம் செய்வது அல்லாமல், வேறு எதனையும் எதிர்பாராமல் உள்ள ஸித்தோபாயத்தை (ஈச்வரன்) சரமச்லோகத்தில் உள்ள “மாம் ஏகம்” என்னும் சொற்கள் காண்பிக்கின்றன. அவனை ஈர்ப்பதான ஸாத்யோபாயமானது (ப்ரபத்தி), சரமச்லோகத்தில் உள்ள “சரணம் வ்ரஜ” என்னும் விதி மூலம் காண்பிக்கப்படுகிறது. இவ்விதமாக விதிக்கப்பட்டுள்ள ப்ரபத்தி வடிவத்தில் உள்ள வித்யையானது, அவனை மகிழ வைப்பதற்காக விதிக்கப்பட்டதால், இது பக்தியோகம் போன்று உபாயமாக உள்ளது. இதன் மூலம் மகிழும் ஈச்வரன், மோக்ஷத்திற்கான நேரடியான உபாயம் ஆகிறான்.