Srimad Rahasyatrayasaram - ஸம்ப்ரதாய ப்ரக்ரியா பாகம் – 29.சரம ச்லோக அதிகாரம் (பத்தி 55)

ஸம்ப்ரதாய ப்ரக்ரியா பாகம் – 29.சரம ச்லோக அதிகாரம்

பகவத் கைங்கர்யத்தை வர்ணாச்ரம தர்மங்களுக்கு உட்பட்டே செய்யவேண்டும்

மூலம் – ஆகையால் வர்ணாச்ரம தர்மங்கள் ஔபாதிகங்களென்று த்யஜிக்கை பூர்வாநுஷ்டாநாதி விருத்தம். இப்படி த்யஜிக்கில், தேஹேந்த்ரியாதி உபாதிகளையொழிய மாலாகரண தீபாரோபணாதி விசேஷ கைங்கர்யங்களும் அநுஷ்டிக்க வொண்ணாமையால், அவையுமெல்லாம் ஔபாதிகங்களாய்த் த்யாஜ்யங்களாம். அவை அநுஷ்டிக்க ஆசைப்படில் அவற்றுக்கு யோக்யதாபாதகங்களான ஆசார ஸம்ஸ்காராதிகளையும் விடவொண்ணாது. ஆனபின்பு (1) ஆஹார க்ரஹ மந்த்ராதி ஜாத்யாதி நியமைர்யுத: குர்யாத் லக்ஷ்மீச கைங்கர்யம் சக்த்யா அநந்ய ப்ரயோஜந: (2) மங்கல்யஸூத்ர வஸ்த்ராதீந் ஸம்ரக்ஷதி யதா வதூ: ததா ப்ரபந்ந: சாஸ்த்ரீயா பதி கைங்கர்ய பத்ததிம் (3) யத்வத் மங்கல்ய ஸூத்ராதே: த்யாகே ஸம்ரக்ஷணே அபி வா ரக்ஷேத் நிரோதை: போகைர் வா பதி: தத்வத் இஹ அபி (4) அவஜ்ஞார்யம் அநர்த்தாய பக்த ஜந்மாதி சிந்தநம் சாஸ்த்ர வ்யவஸ்தா மாத்ரார்த்தம் ந து தத் தூஷ்யதி க்வசித் (5) அத ஏவ ஹி சாஸ்த்ரேஷு தத் தத் ஜாத்யைவ தர்சிதா: தர்மவ்யாத துலாதார சபரீ விதுராதய: (6) ஸ்வஜாதி அநுகுண ஏவ ஏஷாம் வ்ருத்தி: அபி இதிஹாஸிகீ விசேஷ விதி ஸித்தம் து தத்வலாத் தத்ர யுஜ்யதே (7) தேச காலாதி கார்யாதி விசேஷேஷு வ்யவஸ்திதா: ந தர்மா: ப்ராப்திம் அர்ஹந்தி தேசகாலாந்தராதிஷு (8) கேசித் தத் தத் உபாக்யாந தாத்பர்ய க்ரஹணாக்ஷமா: கலி கோலாஹல க்ரீடாம் வர்த்தயந்தி ரமாபதே (9) மாத்ருபி: பித்ருபிச்ச ஏதா: பதிபிர் தேவரை: ததா பூஜ்யா பூஷயிதவ்யாச்ச பஹு கல்யாணம் ஈப்ஸுபி: (10) ஜாமயோ யாநி கேஹாநி சாபந்தி அப்ரதிபூஜிதா: தாநி க்ருத்யா ஹதாநீவ விநச்யந்தி ஸமந்தத: (11) ஏவமாதிஷு பூஜோக்தி: யதா ஔசித்யாத் நியமயதே பக்த ம்லேச்சாதி பூஜோக்தி: ஏவம் ஏவ நியம்யதாம் இந் நியமங்களெல்லாம் ஸம்ப்ரதிபந்ந சிஷ்டாநுஷ்டாந பரம்பரையாலும் ஸித்தங்கள். ஆகையால், தன் வர்ணாச்ரமாதிகளுக்கு அடைத்த நியமங்களோடே பகவத் கைங்கர்யம் பண்ணுகை பரமைகாந்தித்வ விருத்தமன்று.

– ஆகவே வர்ணாச்ரம தர்மங்கள் அனைத்தும் இந்தச் சரீரம் என்னும் ஸம்பந்தம் காரணமாகவே வந்தன என்று எண்ணு அவற்றைக் கைவிடுதல் என்பது பூர்வர்கள் இயற்றி வந்தவை என்ற நிலைக்கு முரணாகின்றன. இவ்விதம் அவற்றைக் கைவிட்டால், சரீரம் மற்றும் இந்த்ரியங்கள் ஆகியவற்றைக் கொண்டு செய்யப்படும் கைங்கர்யங்களான மாலை மற்றும் தீபம் ஆகியவற்றை சமர்ப்பித்தல் என்பதையும், அவை சரீரங்கள் கொண்டு செய்யப்படுதல் என்பதால் விடவேண்டியதாகும். அவற்றைக் கைக்கொள்ள வேண்டும் என்றால், அவற்றை இயற்றும் தகுதியை ஏற்படுத்துகின்ற நித்ய கர்மங்களைக் கைவிடலாகாது. இவ்விதம் ஆன பின்னர், (1) – உணவு, கற்பது, மந்த்ரங்கள், பொருள் ஈட்டல், குலம் ஆகிய அனைத்திலும் தகுந்த கட்டுப்பாடுகளுடன் உள்ளவனாகவும், மற்ற பயன்களை விரும்பாதவனாகவும், மஹாலக்ஷ்மியின் நாயகனுக்குத் தன்னால் இயன்ற கைங்கர்யத்தைச் செய்யவேண்டும். (2) – ஒரு பெண் எவ்வாறு தனது திருமாங்கல்யம், விவாஹப் புடவை ஆகியவற்றை மிகவும் கவனத்துடன் பாதுகாக்கிறாளோ அது போன்று ப்ரபந்நன் சாஸ்த்ரங்களை வழுவாமல் ஸர்வேச்வரனுடைய கைங்கர்யத்தைக் காக்கவேண்டும். (3) – தனது திருமாங்கல்யத்தை விட்டவளை தண்டனையுடனும், பாதுகாப்பவளை இன்பத்துடனும் எவ்விதம் கணவன் காப்பாற்றுவானோ அது போன்றே ஸர்வேச்வரனும் கைங்கர்ய விஷயத்தில் உள்ளான். (4) அவமதிக்கும் பொருட்டு பக்தர்களுடைய பிறப்பு முதலானவற்றைக் குறித்து ஆராய்தல் போன்ற செயல்கள் பெரும் தீமையை உண்டாக்கும்; ஆனால் சாஸ்த்ரங்களில் கூறியவற்றை உறுதி செய்வதற்காக செய்யப்படும் இந்த ஆராய்ச்சியால் தோஷம் இல்லை. (5) ஆகவே சாஸ்த்ரங்களில் தர்மவ்யாதர், துலாதரர், சபரீ முதலானவர்கள் அவரவர்களுடைய குலத்தைக் குறிப்பிட்டே கூறப்பட்டுள்ளனர். (6) இதிஹாஸங்களில் காண்பிக்கப்பட்ட இவர்களுடைய செய்கைகளும், இவர்களுடைய குலத்தின் அடிப்படையிலேயே உள்ளன; ஒரு சிலருக்கு ஏற்படும் விதிவிலக்கு என்பது அந்தந்த அதிகாரியின் செயலைப் பொறுத்தே அமையும். (7) குறிப்பிட்ட இடம், காலம், அதிகாரி என்பதற்கு மட்டும் வரையறை செய்யப்பட்ட தர்மங்கள், மற்ற இடம் காலம் போன்றவற்றுக்குப் பொருந்தாது. (8) இதிஹாஸம் முதலானவற்றில் கூறப்பட்டுள்ளவற்றை அறியாமல் தவறுகள் செய்தபடி உள்ளவர்கள், கலியின் ஆரவாரத்தினால் மஹாலக்ஷ்மியின் நாயகனுக்கு லீலையை அதிகப்படுத்துகின்றனர். (9) தாய், தந்தை, கணவன், மைத்துனன் போன்ற அனைவராலும் தங்களுடைய மங்களங்களுக்காக இந்த மருமகள் அலங்கரிக்கப்பட்டு பூஜிக்கத்தக்கவள் ஆவாள். (10) – இவ்விதம் பூஜிக்கப்படாத மருமகள் சபிக்கும் வீடானது பேயால் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டது போன்று அழிகிறது. (11) – இங்குள்ள “பூஜிக்கப்படுதல்” என்பது எவ்விதம் கொள்ளப்படுகிறதோ அது போன்றே, பக்தர்கள் தாழ்ந்தவர்களாக இருந்தாலும் பூஜிக்கப்படவேண்டும் என்று கொள்ளவேண்டும். இங்கு கூறப்பட்ட அனைத்து விதிகளும், அனைத்துவிதமான ஆசார்ய-சிஷ்ய பரம்பரைகளால் ஏற்கப்பட்டதாகும். ஆகவே தன்னுடைய வர்ணாச்ரம தர்மங்களுக்கு ஏற்ற கட்டுப்பாடுகளுடன் செய்யப்படும் பகவத் கைங்கர்யம் என்பது பரமைகாந்தி என்னும் நிலைக்கு முரணானது அல்ல.