Srimad Rahasyatrayasaram - ஸம்ப்ரதாய ப்ரக்ரியா பாகம் – 29.சரம ச்லோக அதிகாரம் (பத்தி 51)
ஸம்ப்ரதாய ப்ரக்ரியா பாகம் – 29.சரம ச்லோக அதிகாரம்
வர்ணாச்ரம தர்மங்கள் பரமைகாந்தி என்னும் நிலையை மாற்றுவதில்லை
மூலம் – வங்கிபுரத்து நம்பியும் ப்ரபந்நனுக்கு அஹோராத்ர க்ருத்யமான பகவத் ஸமாராதநத்தைச் சொல்ல இழிந்து “காயத்ரீ ஜப பர்யந்தம் மந்த்ராசமந பூர்வகம் | ஸாந்த்யம் கர்மாகிலம் ஸாது ஸமாப்ய ச யதாவிதி || ஸமிதாஜ்யாதிபிர் த்ரவ்யை: மந்த்ரைரபி யதோதிதை: | ஹுத்வா அக்நீந் அக்நிஹோத்ராதௌ உக்தம் காலமபி க்ஷிபந்” என்றும், “ததோ மாத்யந்தினம் கர்ம ஸ்வோதிதம் ச்ருதி சோதிதம் | ஸ்நாநாதி ப்ரஹ்ம யஜ்ஞாந்தம் க்ருத்வா அகிலமதந்த்ரித:” என்றும், “ஹோமம் பித்ரு க்ரியாம் பச்சாத் அநுயாகாதிகம் ச யத்” என்றும் இப் ப்ரகாரங்களிலே தத் தந்மந்த்ர பூர்வகங்களான வர்ணாச்ரம தர்மங்களை அருளிச்செய்தார். பட்டரும் ஆழ்வானும் தாந்தாங்கள் அருளிச் செய்த நித்யங்களிலே “ச்ருதி ஸ்ம்ருத்யுதிதம் கர்ம யாவச்சக்தி பராத்மந: | ஆராதநத்வேநாபாத்ய ஸ ஊர்த்வபுண்ட்ரச்ச தர்பயேத்” இத்யாதிகளை அருளிச் செய்தார்கள். பெரியஜீயரும் “ஸ்ரீபராசர பட்டார்ய சரணௌ ஸம்ச்ரயேமஹி” இத்யாதியாலே ஸம்ப்ரதாய விசேஷ ஜ்ஞாபநார்த்தமாக குருநமஸ்காராதிகளைப் பண்ணி, “பகவச்சரணாம்போஜ பரிசார்ய விதிக்ரமம் | ஏகாந்திபிர் அநுஷ்டேயம் நித்யம் ஸமபிதத்யமஹே” என்று தொடங்கி “ஆபோஹித்யாதிபிர் மந்த்ரை: வாசகை: பரமாத்மந: | ஸம்ப்ரேக்ஷ்ய மந்த்ர ஆசமநம் மந்த்ரைஸ் தத் ப்ரதிபாதகை: || ஆதித்யாந்த: ஸ்திதஸ்ய அர்க்யம் விதீர்ய பரமாத்மந: | ப்ரதிபாதிகயா விஷ்ணோ: ஸவித்ரயா தம் ஜபேத்விரம் || த்யாயந் ஜப்த்வோபதிஷ்டேத தமேவ புருஷோத்தமம் | நாராயணாத்மகாந் தேவாந் ருஷீந் ஸந்தர்பயேத் பித்ரூந்” என்று அருளிச்செய்தார். பாஷ்யகார ஸம்ப்ரதாயத்திலுள்ள குலங்கள் எல்லாம் இன்றறுதியாக ஸ்வஸூத்ரோக்தமானபடியே தத் தத் தேவதா மந்த்ரங்களைக் கொண்டு விவாஹ உபநயநாதிகள் அநுஷ்டிக்கவும் காணா நின்றோம். பெரியநம்பி முதலான பரமாசார்யர்களும் தந்தம் ஸூத்ரங்களின்படியே யஜ்ஞாதிகள் பண்ணினார்களென்னுமிடம் ஸர்வர்க்கும் ப்ரஸித்தம்.
– அஹோராத்ரம் என்பதான பகவத் ஆராதனம் குறித்து ப்ரபந்நர்களுக்கு வங்கிபுரத்து நம்பி உபதேசிக்க எண்ணியவராக, வங்கிவம்சேச்வர காரிகை (77-84) - காயத்ரீ ஜப பர்யந்தம் மந்த்ராசமந பூர்வகம் | ஸாந்த்யம் கர்மாகிலம் ஸாது ஸமாப்ய ச யதாவிதி || ஸமிதாஜ்யாதிபிர் த்ரவ்யை: மந்த்ரைரபி யதோதிதை: | ஹுத்வா அக்நீந் அக்நிஹோத்ராதௌ உக்தம் காலமபி க்ஷிபந் – மந்த்ரத்துடன் ஆசமநத்தைத் தொடங்கி காயத்ரீஜபம் முடிய உள்ளதான ஸந்த்யாகாலத்து கர்மங்கள் அனைத்தையும் முறைப்படி முடித்து, ஸமித்து நெய் போன்றவை கொண்டு தகுந்த மந்த்ரங்கள் மூலம் அக்னிஹோத்ரம் போன்ற கர்மங்களை இயற்றி, சாஸ்த்ரம் விதித்த முறைகளில் காலத்தைக் கழித்தபடி – என்றும், காரிகை (90) - ததோ மாத்யந்தினம் கர்ம ஸ்வோதிதம் ச்ருதி சோதிதம் | ஸ்நாநாதி ப்ரஹ்ம யஜ்ஞாந்தம் க்ருத்வா அகிலமதந்த்ரித: - மதிய நேரத்தில் செய்யவேண்டும் என்று சாஸ்த்ரங்களால் விதிக்கப்பட்ட கர்மங்கள் அனைத்தையும் நீராடுதல் தொடங்கி ப்ரஹ்மயஜ்ஞம் முடிய உள்ள அனைத்தையும் சலிப்பில்லாமல் முடித்து – என்றும், காரிகை (501) - ஹோமம் பித்ரு க்ரியாம் பச்சாத் அநுயாகாதிகம் ச யத் – பின்னர் தேவயஜ்ஞம், பித்ருயஜ்ஞம் ஆகியவற்றைச் செய்து பகவத் ஆராதனையில் சமர்ப்பித்த ப்ரஸாதங்களை உண்ணவேண்டும் – என்றும் அருளிச்செய்தார்; அதாவது தங்களுடைய வர்ணாச்ரம தர்மங்களை அவற்றுக்கு உரிய மந்த்ரங்களுடன் செய்தல் வேண்டும் என்றார். ஸ்வாமி பராசரபட்டரும் கூரத்தாழ்வானும் தாங்கள் அருளிச்செய்த நித்யக்ரந்தத்தில், ச்ருதி ஸ்ம்ருத்யுதிதம் கர்ம யாவச்சக்தி பராத்மந: | ஆராதநத்வேநாபாத்ய ஸ ஊர்த்வபுண்ட்ரச்ச தர்பயேத் – ச்ருதி மற்ற்ம் ஸ்ம்ருதி ஆகியவற்றில் விதிக்கப்பட்ட கர்மங்களை ஊர்த்தபுண்ட்ரத்தைத் தரித்தபடி, பரமாத்மாவுக்குச் செய்யும் ஆராதனம் என்றே எண்ணியபடி, தங்களுடைய சக்திக்கு ஏற்ப தர்ப்பணத்தையும் செய்தல்வேண்டும் – என்றனர். ஸ்வாமி நஞ்ஜீயர், “ஸ்ரீபராசர பட்டார்ய சரணௌ ஸம்ச்ரயேமஹி – ஸ்வாமி பராசரபட்டருடைய திருவடிகளில் சரணம் புகுகிறோம்” என்பதன் மூலம் ஆசார்யர்களுக்குச் செய்யவேண்டிய நமஸ்காரம் முதலானவற்றை நினைவுபடுத்துகிறார். இதனைத் தொடர்ந்து, பகவச்சரணாம்போஜ பரிசார்ய விதிக்ரமம் | ஏகாந்திபிர் அநுஷ்டேயம் நித்யம் ஸமபிதத்யமஹே – பரமைகாந்திகள் அன்றாடம் செய்யவேண்டியதான பகவானுடைய திருவடித்தாமரைளின் கைங்கர்ய வரிசையை உரைக்கிறோம் – என்றார். மேலும், ஆபோஹித்யாதிபிர் மந்த்ரை: வாசகை: பரமாத்மந: | ஸம்ப்ரேக்ஷ்ய மந்த்ர ஆசமநம் மந்த்ரைஸ் தத் ப்ரதிபாதகை: || ஆதித்யாந்த: ஸ்திதஸ்ய அர்க்யம் விதீர்ய பரமாத்மந: | ப்ரதிபாதிகயா விஷ்ணோ: ஸவித்ரயா தம் ஜபேத்விரம் || த்யாயந் ஜப்த்வோபதிஷ்டேத தமேவ புருஷோத்தமம் | நாராயணாத்மகாந் தேவாந் ருஷீந் ஸந்தர்பயேத் பித்ரூந் – ஸர்வேச்வரனைக் கூறிகின்ற “ஆபோஹி” தொடக்கமாக உள்ள மந்த்ரங்கள் மூலம் ப்ரோக்ஷித்துக் கொண்டு, அவனைக் கூறும் மந்த்ரங்களால் ஆசமனம் செய்யவேண்டும்; பின்னர் சூரியமண்டலத்தில் உள்ள ஸர்வேச்வரனுக்கு அர்க்யம் அளிக்கவேண்டும்; தொடர்ந்து அவனை உரைக்கும் ஸாவித்ரி மந்த்ரம் மூலம் அவனைத் த்யானித்து ஜபிக்கவேண்டும்; அடுத்து புருஷோத்தமனாகிய அவனை உபஸ்தாநம் செய்து, நாராயணனைத் தங்கள் ஆத்மாவாகக் கொண்டுள்ள தேவர்கள் ரிஷிகள் பித்ருக்கள் ஆகியோருக்குத் தர்ப்பணம் செய்யவேண்டும் – என்று அருளிச் செய்தார். ஸ்ரீபாஷ்யகாரருடைய மதத்தில் உள்ள பல்வேறு குலத்தவர்கள், தங்களுடைய குலத்திற்கு ஏற்ப உள்ள ஸூத்ரங்கள் மூலமாக அந்தந்த தேவதைகளைக் குறித்த மந்த்ரங்கள் மூலம் விவாஹம் மற்றும் உபநயனம் ஆகியவற்றைச் செய்வதை நாம் காண்கிறோம். பெரியநம்பி முதலான ஆசார்யர்களும் தங்களுடைய ஸூத்ரங்களைப் பின்பற்றியே யஜ்ஞம் முதலானவற்றைச் செய்தார்கள் என்பது அறிவோம்.