Srimad Rahasyatrayasaram - ஸம்ப்ரதாய ப்ரக்ரியா பாகம் – 29.சரம ச்லோக அதிகாரம் (பத்தி 45)
ஸம்ப்ரதாய ப்ரக்ரியா பாகம் – 29.சரம ச்லோக அதிகாரம்
கைங்கர்யம் செய்வது குறித்து ஸ்வாமி ஆளவந்தாருடைய கருத்துக்கள்
மூலம் – இச் ச்லோகங்களை உபாஸநாதிகாரி பக்கலிலே யோஜிக்கும்போது உபாஸநாதிகளுடைய ஸ்வாதுதமத்வத்தையும், பலோபாயமான சரண்யனுக்குப் ப்ரஸாதநமாய்க் கொண்டு பலத்துக்கு ஸாக்ஷாதுபாயமன்றிக்கே நிற்கிற நிலையையும், இவ்வுபாஸநத்தாலே ப்ரஸந்நனான ஸர்வேச்வரன் தானே பலத்துக்கு ஸாக்ஷாதுபாயமாய் நிற்கிற நிலையையும் சொல்லுகையிலே நோக்காகக் கடவது.
– இந்த ச்லோகங்களை உபாஸனையில் நிலைநிற்கும் அதிகாரி விஷயத்தில் வைத்து நோக்கும்போது - இந்த உபாஸனைகள் அனைத்துமே அதனை இயற்றுபவனுக்கு இனிமையாக உள்ளன என்பதும், ஆனால் இவை நேரடியாகப் பலன் அளிக்கவல்லது அல்ல என்பதும், பலனை அளிக்கவல்ல உபாயமாக உள்ள ஸர்வேச்வரனுடைய அனுக்ரஹத்தைப் பெற உதவும் உபாயமாக உள்ளன என்பதும், இந்த உபாஸனைகளால் மகிழ்கின்ற ஸர்வேச்வரன், தானே பலனைப் பெறுவதற்கான உபாயமாக நிற்கிறான் என்பதும் வெளிப்படுகின்றன.