Srimad Rahasyatrayasaram - ஸம்ப்ரதாய ப்ரக்ரியா பாகம் – 29.சரம ச்லோக அதிகாரம் (பத்தி 41)
ஸம்ப்ரதாய ப்ரக்ரியா பாகம் – 29.சரம ச்லோக அதிகாரம்
ஸங்கல்பமாத்ரமேவ அங்கம் ச்ருதம் ஆசரணம் புந: அநங்கம் ஆஜ்ஞயா ப்ராப்தம் ஸங்கல்ப நிபந்தநம்
– “நான் பகவானுக்கு ஏற்றபடி நடந்துகொள்வேன்” என்று மனதால் எண்ணுவது மட்டுமே சாஸ்த்ரங்களில் அங்கமாகக் கொள்ளப்பட்டது. ஆனால் அவ்விதம் நடந்து கொள்ளுதல் என்பது அங்கம் அல்ல, அது பகவத் ஆணையால் உண்டானதாகும்; அது ஸங்கல்பம் காரணமாக வந்தது அல்ல.