Srimad Rahasyatrayasaram - ஸம்ப்ரதாய ப்ரக்ரியா பாகம் – 29.சரம ச்லோக அதிகாரம் (பத்தி 37)
ஸம்ப்ரதாய ப்ரக்ரியா பாகம் – 29.சரம ச்லோக அதிகாரம்
“பரித்யஜ்ய” என்பதற்கு உபாயத்வ புத்தியைத் துறத்தல் என்பதே பொருள் என்பது கண்டிக்கப்படுதல்
மூலம் – அத: ஸ்வரூப த்யாக உக்தௌ கைங்கர்யஸ்ய அபசாரதா உபாயத்வம் இதி த்யாகோ தத் ஸ்வரூப அங்கதா பவேத் ஸாத்விக த்யாக யுக்தாநாம் தர்மாணாம் ஏதத் அங்கதா நூநம் விஸ்ம்ருத காகாதி வ்ருத்தாந்தை: உபவர்ணிதா ஸக்ருத் ப்ரபதநேந ஏவ தர்மாந்தரதவீயஸா தத் க்ஷணே அபிமதம் பூர்வே ஸம்ப்ராபு: இதி சுச்ரும ப்ரஸக்த அங்கத்வ பாதே து ப்ரஹ்மாஸ்த்ர ஸம தேஜஸ: உபாயஸ்ய ப்ரபாவச்ச கைங்கர்யாதி ச ஸுஸ்திரம்
– அத: ஸ்வரூப த்யாக உக்தௌ கைங்கர்யஸ்ய அபசாரதா உபாயத்வம் இதி த்யாகோ தத் ஸ்வரூப அங்கதா பவேத் – எனவே கர்மங்களை ஸ்வரூபத்துடன் விடவேண்டும் என்று கூறினால், கைங்கர்யத்திற்கு அபசாரமாக உள்ள நிலை உண்டாகிவிடும். கர்மங்கள் உபாயங்களாக உள்ளன என்னும் எண்ணத்தைக் கைவிடவேண்டும் என்று கூறினால், தர்மங்களுடைய ஸ்வரூபத்திற்கு (ப்ரபத்தியின்) அங்கமாக உள்ள நிலை உண்டாகும். ஸாத்விக த்யாக யுக்தாநாம் தர்மாணாம் ஏதத் அங்கதா நூநம் விஸ்ம்ருத காகாதி வ்ருத்தாந்தை: உபவர்ணிதா – காகாஸுரனுடைய சரிதத்தை மறந்தவர்களால், ஸாத்விக த்யாகத்துடன் சேர்ந்ததாக உள்ள தர்மங்களுக்கு ப்ரபத்தியின் அங்கமாக உள்ள தன்மை கூறப்படுகிறது. ஸக்ருத் ப்ரபதநேந ஏவ தர்மாந்தரதவீயஸா தத் க்ஷணே அபிமதம் பூர்வே ஸம்ப்ராபு: இதி சுச்ரும – ஐந்து அங்கங்கள் அல்லாமல் வேறு எந்தத் தர்மங்களையும் அங்கமாக வேண்டாதபடி உள்ளதும், ஒருமுறை மட்டுமே செய்யப்படுவதும் ஆகிய ப்ரபத்தியால், ப்ரபத்தி செய்தவர்கள் அந்த நொடியிலேயே தாங்கள் விரும்பிய பலனை அடைந்தார்கள் என நாம் அறிகிறோம். ப்ரஸக்த அங்கத்வ பாதே து ப்ரஹ்மாஸ்த்ர ஸம தேஜஸ: உபாயஸ்ய ப்ரபாவச்ச கைங்கர்யாதி ச ஸுஸ்திரம் – மற்ற தர்மங்கள் ப்ரபத்திக்கு அங்கமாக வருவதை மறுத்தவுடன், ப்ரஹ்மாஸ்த்ரம் போன்ற தேஜஸ் கொண்ட ப்ரபத்தியின் பெருமை மற்றும் கைங்கர்யம் ஆகியவை உறுதியாக நின்றன.