Srimad Rahasyatrayasaram - ஸம்ப்ரதாய ப்ரக்ரியா பாகம் – 29.சரம ச்லோக அதிகாரம் (பத்தி 35)
ஸம்ப்ரதாய ப்ரக்ரியா பாகம் – 29.சரம ச்லோக அதிகாரம்
இரண்டு முக்கிய ச்லோகங்களுக்கான விளக்கம்
மூலம் – வ்யாஸாதிகள் அதிகாரி புருஷர்களாகையாலே விளம்ப க்ஷமருமாய் இருப்பார்கள். ஆகையால் உபாஸநத்தில் இழிந்தார்கள்; அல்லது ஜ்ஞாந மாந்த்யமாதல் விச்வாஸ மாந்த்யமாதல் உண்டாகி இழிந்தார்களல்லர்; அசக்தஸ்யாதி க்ருச்சேஷு துராசா தார்ட்டய சாலிந: கஸ்யசித் புத்தி தௌர்பல்யம் லகு த்யாகஸ்ய காரணம் தத்ர ப்ரபத்யநர்ஹாணாம் அந்யாதித்யபி யுஜ்யதே வ்யாஸாதிஷு து நைவைஷா நீதி: ஸம்சய காதிஷு இப்படி உபாஸந ப்ரபதங்களுக்கு அதிகாரம் வ்யவஸ்திதமாகையால் இரண்டு சாஸ்த்ரமும் ஸப்ரயோஜநம். இரண்டு அதிகாரிகளுக்கும் ஸ்வதர்மத்தில் ப்ரதிபத்தி வைஷம்யமே உள்ளது. ப்ரபந்நனுக்குக் கோரின பலத்தைப் பற்ற வேறு ஒன்றை அநுஷ்டிக்கில் ப்ரஹ்மாஸ்த்ர பந்த ந்யாயத்தாலே விரோதமுண்டானாலும், ஸ்வயம் ப்ரயோஜநமாகவாதல் பகவத்பாகவத ஸம்ருத்தயாதி பலாந்தரத்தைப் பற்றவாதல் வேறொன்றை அநுஷ்டித்தால் விரோதமில்லை.
– வ்யாஸர் முதலானவர்கள் பரமபுருஷனுடைய அதிகாரிகள் என்பதால் அவர்கள் காலதாமதத்தையும் பொறுத்துக் கொண்டார்கள், மற்ற உபாயங்களிலும் ஈடுபட்டார்கள். அவர்கள் ஞானம் இன்றியோ அல்லது நம்பிக்கை இன்றியோ மற்ற உபாயங்களைக் கைக்கொள்ளவில்லை. அசக்தஸ்யாதி க்ருச்சேஷு துராசா தார்ட்டய சாலிந: கஸ்யசித் புத்தி தௌர்பல்யம் லகு த்யாகஸ்ய காரணம் – கைக்கொள்ள மிகவும் கடினமாக உள்ள உபாயங்களில் நிலைநிற்கச் சக்தி அற்றவனாகவும், பக்தியோகம் முதலியவற்றால் முக்தி அடைவேன் என்னும் வீணாசையைக் கொண்டவனாகவும் உள்ள ஒருவனுக்கு, எளிதான உபாயத்தைக் கைவிடுதல் என்பதற்குக் காரணம் நம்பிக்கைக் குறைவே ஆகும். தத்ர ப்ரபத்யநர்ஹாணாம் அந்யாதித்யபி யுஜ்யதே வ்யாஸாதிஷு து நைவைஷா நீதி: ஸம்சய காதிஷு – அத்தகைய நம்பிக்கைக் குறைவு உண்டாகும்போது, ப்ரபத்தியைக் கைக்கொள்ளும் தகுதி இல்லாதவர்களுக்கு வேறு உபாயம் ஏற்றதே என்று கூறுவது பொருத்தமே ஆகும். ஆனால் மற்றவர்களுடைய ஐயங்களைப் போக்கும் வ்யாஸர் முதலானவர்களிடம் இந்தச் சிந்தனை பொருந்தாது. இப்படியாக உபாஸனை மற்றும் ப்ரபத்தி ஆகிய இரண்டிற்கான தகுதியைக் குறித்துத் தீர்மானிக்கப்பட்டதால், இந்த இரண்டுமே அந்தந்த நிலைகளுக்கு ஏற்றபடி பயன் அளிப்பதே ஆகின்றன. இந்த இரண்டு அதிகாரிகளுக்கும் அவரவர்களுடைய தர்மங்களுக்குக் கைக்கொள்வதில் உள்ள வேறுபாடு என்பது அவர்களுக்கு அவற்றைக் குறித்த எண்ணத்தில் உள்ள வேறுபாடு காரணமாகவே அமைகிறது. ப்ரபந்நன் ஒருவன் தான் அடைய எண்ணும் பலனுக்காக (மோக்ஷம்) வேறு எந்த உபாயத்தைக் கைக்கொண்டாலும், அவை ப்ரஹ்மாஸ்த்ரத்திற்கு முன்பாக எதுவும் பலிக்காதது போன்று, பலன் அளிக்காது (ப்ரபத்தி உட்பட). ஆனால் அவை பகவத் ஆராதனையாகவும், பாகவத நன்மைக்காகவும் செய்யப்பட்டால், எந்தப் பாதிப்பும் இல்லை.