Srimad Rahasyatrayasaram - ஸம்ப்ரதாய ப்ரக்ரியா பாகம் – 29.சரம ச்லோக அதிகாரம் (பத்தி 33)

ஸம்ப்ரதாய ப்ரக்ரியா பாகம் – 29.சரம ச்லோக அதிகாரம்

இரண்டு முக்கிய ச்லோகங்களுக்கான விளக்கம்

மூலம் – இவையிரண்டையும் நினைத்து “ஸ்வபக்தே பூம்நா வா” என்கிறார். இங்கு பக்தியென்றது ப்ரேம பாரவச்யத்தைச் சொன்னபடி; அல்லது பக்தியோகத்தைச் சொன்னபடியன்று. இப்படி பக்தியினுடைய பூமாவாகிறது கடுகப் ப்ராப்தி கிடையாதபோது அழியும்படியான அவஸ்தா விசேஷம். இது சிலர்க்குக் கட்டளைப்பட்ட பக்தியோகமில்லையாகிலும், ஸுக்ருத விசேஷ மூலமான பகவத் ப்ரஸாதத்தாலே வரும். இவ் அவஸ்தையுடையவனும் ப்ரபத்திக்கு அதிகாரி.

– இந்த இரண்டையும் கருத்தில் கொண்டே ஸ்வாமி பராசரபட்டர் – ஸ்வபக்தே பூம்நா வா – பக்தியின் மிகுதியால் – என்றார். இங்கு கூறப்பட்ட பக்தி என்பது பகவானிடம் கொண்ட ப்ரேமை ஆகும், அது பக்தியோகத்தைக் குறிக்கவில்லை. பக்தியின் மிகுதி என்றால், விரைவாக பகவானைக் கிட்ட இயலவில்லை என்றால், உயிர் போகும்படியான நிலையில் உள்ள தன்மையாகும். இத்தகைய நிலையானது சாஸ்த்ரங்களால் விதிக்கப்பட்ட பக்தியோகத்தில் காணப்படுவதில்லை என்றாலும், ஒரு சிலருக்கு அவர்கள் செய்த நற்செயல்கள் காரணமாக, இந்த நிலையானது பகவானால் அளிக்கப்படுவதாகும். இந்த நிலையில் உள்ளவர்களும் ப்ரபத்திக்குத் தகுதியானவர்கள் ஆவர்.