Srimad Rahasyatrayasaram - ஸம்ப்ரதாய ப்ரக்ரியா பாகம் – 29.சரம ச்லோக அதிகாரம் (பத்தி 30)

ஸம்ப்ரதாய ப்ரக்ரியா பாகம் – 29.சரம ச்லோக அதிகாரம்

இரண்டு முக்கிய ச்லோகங்களுக்கான விளக்கம்

மூலம் - ஆனால், “இதம் சரணம் அஜ்ஞாநம் இதமேவ விஜாநதாம் | இதம் திதீர்ஷதாம் பாரம் இதம் ஆநந்த்யம் இச்சதாம்” என்றும், “அவித்யாதோ தேவே பரிப்ருடதயா வா விதிதயா | ஸ்வபக்தேர் பூம்நா வா ஜகதி கதிம் அந்யாம் அவிதுஷாம்” என்றும் சொல்லுகிற அதிகார பேதமிருக்கும்படி என்? என்னில், இவ்விடத்திற் சொன்ன அஜ்ஞாநம், உபாஸநாதிகளில் தெளிவில்லாமையாதல் ப்ரபத்தி தன்னிலும் ஸூக்ஷ்ம விசேஷங்கள் அறியாமையாதலா மத்தனை.

– ஆனால், லக்ஷ்மீ தந்த்ரம் (17-101) - இதம் சரணம் அஜ்ஞாநம் இதமேவ விஜாநதாம் | இதம் திதீர்ஷதாம் பாரம் இதம் ஆநந்த்யம் இச்சதாம் - ஏதும் அறியாதவர்கள், அனைத்தும் அறிந்தவர்கள் என்ற அனைவரும், இந்தப் பெருங்கடலின் அக்கரையை அடைந்து, தாங்கள் அடைய விரும்பும் இலக்கான மோக்ஷத்தைப் பெறுவதற்கு இதுவே வழியாகும் – என்றும், ஸ்வாமி பராசரபட்டரின் முக்தகம் - அவித்யாதோ தேவே பரிப்ருடதயா வா விதிதயா | ஸ்வபக்தேர் பூம்நா வா ஜகதி கதிம் அந்யாம் அவிதுஷாம் – பக்தியோகத்தில் ஞானம் இல்லாதவர்கள், நாராயணனே உயர்ந்த தேவன் என்னும் பக்தியோகத்திற்குத் தேவையான ஞானம் உள்ளவர்கள், ஸர்வேச்வரனிடம் மாறாத அன்பு கொண்டவர்கள், ப்ரபத்தி அன்றி வேறு கதி அறியாதவர்கள் – என்றும் உள்ள ச்லோகங்களில், ப்ரபத்தியைக் கைக்கொள்ளும் அதிகாரிகளுக்கிடையே உள்ள வேறுபாடுகளை எவ்விதம் விளக்க இயலும் என்று கேட்கலாம். இந்த ச்லோகங்களில் கூறப்படும் அறியாமை என்பது, உபாஸனைகளில் தெளிவான ஞானம் இல்லாமையும் மற்றும் ப்ரபத்தியைக் குறித்து மிகவும் நுட்பமான ஞானம் இல்லாமையுமே ஆகும்.