Srimad Rahasyatrayasaram - ஸம்ப்ரதாய ப்ரக்ரியா பாகம் – 29.சரம ச்லோக அதிகாரம் (பத்தி 28)

ஸம்ப்ரதாய ப்ரக்ரியா பாகம் – 29.சரம ச்லோக அதிகாரம்

இத்தம் அர்த்த அவிசேஷே அபி யோஜநாபேத மாத்ரத: ப்ராசாம் விவாத: ஸம்வ்ருத்தோ பாஷ்யகாரை: அவாரித:

– சரம ச்லோகத்தால் கூறப்படும் பொருள் இன்னது என்னும் கருத்தில் பூர்வார்சார்யர்களுக்குள் எந்த வேறுபாடும் இல்லை; ஆனால், அந்த ச்லோகத்தில் எந்தப் பதம், எந்தப் பொருளை உணர்த்துகிறது என்பதில் மட்டுமே அவர்களுக்குள் முரண்பாடு உள்ளது. ஆகவே இவற்றை எம்பெருமானார் தடுக்கவில்லை.