Srimad Rahasyatrayasaram - ஸம்ப்ரதாய ப்ரக்ரியா பாகம் – 29.சரம ச்லோக அதிகாரம் (பத்தி 27)

ஸம்ப்ரதாய ப்ரக்ரியா பாகம் – 29.சரம ச்லோக அதிகாரம்

நைரபேக்ஷ்யம் புரஸ்க்ருத்ய விஹிதஸ்ய லகீயஸ: உபாயஸ்ய அதிகாரம் து சோக த்யோத்யம் விது: பரே

– ஒரு சிலர் கூறுவது : சரம ச்லோகமானது முதலில் மற்ற அங்கங்கள் அவசியம் இல்லை என்பதைக் கூறிய பின்னர், “வ்ரஜ” என்பதன் மூலம் விதிக்கப்படுவதான மிகவும் எளிய உபாயத்தைக் கைக்கொள்ளும் தகுதி உள்ளவன் யார் என்பதை, “மாசுச:” என்பதன் மூலம் தள்ளப்படவேண்டியதாகக் கூறப்படும் சோகம் என்பதால் உணர்த்துகிறது (அதாவது இங்கு சோகம் என்பது மற்ற உபாயங்களைக் கைக்கொள்ள இயலவில்லையே என்னும் நிலையாகும்) – என்பதாகும்.