Srimad Rahasyatrayasaram - ஸம்ப்ரதாய ப்ரக்ரியா பாகம் – 29.சரம ச்லோக அதிகாரம் (பத்தி 26)

ஸம்ப்ரதாய ப்ரக்ரியா பாகம் – 29.சரம ச்லோக அதிகாரம்

அதிகாரம் புரஸ்க்ருத்ய உபாயஸ்ய நிரபேக்ஷதாம் ஏக சப்தேந வக்தீதி கேசித் வாக்யவிதோ விது:

– வாக்கியங்களுடைய அமைப்பு முறையை அறிந்த சில ஆசார்யர்கள், பரித்யஜ்ய என்பதன் மூலம் சரம ச்லோகமானது முதலில், ப்ரபத்திக்கான அதிகாரம் கொண்டவர்களை உரைத்த பின்னர் (இவர்கள் ஆகிஞ்சந்யத்தை உடையவர்கள்), “ஏகம்” என்னும் பதம் மூலம் மற்ற அங்கங்கள் அவசியம் இல்லை என்பதைக் கூறுவதாகக் கொண்டனர்.