Srimad Rahasyatrayasaram - ஸம்ப்ரதாய ப்ரக்ரியா பாகம் – 29.சரம ச்லோக அதிகாரம் (பத்தி 21)

ஸம்ப்ரதாய ப்ரக்ரியா பாகம் – 29.சரம ச்லோக அதிகாரம்

தங்களுடைய வர்ணாச்ரம தர்மங்களைத் துறக்கவேண்டும் என்பதற்கான கண்டனம்

மூலம் – “நிஷேத வாக்ய ஸித்தங்களான நிவ்ருத்தி ரூப தர்மங்கள், ஸ்வரக்ஷணார்த்த ஸ்வவ்யாபாரமல்லாமையாலே, சரணாகதியோடு விரோதமில்லாமையால் இங்குப் ப்ரவ்ருத்தி ரூப தர்மங்களினுடைய த்யாகமே விவக்ஷிதம்” என்னும் நிர்வாஹமும் மந்தம். நிவ்ருத்தியும் வ்யாபார விசேஷமென்னுமிடமும் அதுவும் ஸ்வரக்ஷணார்த்தமா மென்னுமிடமும் லோக வேத ஸித்தமிறே.

– “சில செயல்களைச் செய்யக்கூடாது என்று தடுக்கும் விதத்தில் அமைந்துள்ள விலக்குகின்ற வடிவத்தில் உள்ளதான (நிவ்ருத்தி) தர்மங்கள், தங்களைக் தாங்களே காப்பாற்றிக் கொள்வதற்குக் கைக்கொள்ளும் செயல்களைக் கூறாத காரணத்தால், அவை சரணாகதியுடன் முரண்பாடு அற்றவை அல்ல (இவை வெளிப்படையாகத் தடுக்கப்பட்டதால், தனியாகக் கைவிடவேண்டியது இல்லை). ஆகவே இங்கு கைவிடப்படவேண்டும் என்று கூறப்பட்டவை, வேதங்களால் செய்தாகவேண்டும் என்று உபதேசம் செய்யப்படும் தர்மங்கள் அல்லாமல், மேலே கூறப்பட்ட நிவ்ருத்தி தர்மங்கள் அல்ல” என்று சிலர் கூறுவர். இந்த வாதமும் பொருந்தாது. சிலவற்றைச் செய்தல் கூடாது என்று தடுக்கப்பட்டாலும், அந்தத் தர்மங்களும் ஒரு சிலருக்கு விருப்பமான செயல்களாகவே இருக்கலாம் (அப்போது அவர்கள் அதனைக் கைவிடுகிறார்கள் அல்லவோ) அல்லது அவை தங்களைக் காபாற்றிக் கொள்ளும் செயலாகவும் இருக்கலாம் என்பதை நாம் இந்த உலகத்திலும் வேதங்களிலும் காணலாம்.