Srimad Rahasyatrayasaram - ஸம்ப்ரதாய ப்ரக்ரியா பாகம் – 29.சரம ச்லோக அதிகாரம் (பத்தி 20)
ஸம்ப்ரதாய ப்ரக்ரியா பாகம் – 29.சரம ச்லோக அதிகாரம்
தங்களுடைய வர்ணாச்ரம தர்மங்களைத் துறக்கவேண்டும் என்பதற்கான கண்டனம்
மூலம் – “தந்தம் ஜாத்யாதிகளுக்கு அநுரூபங்களுமாய்த் தத்தமக்கு சக்யங்களுமான ஸர்வ தர்மங்களினுடைய ஸ்வரூப த்யாகம், அங்கமாக விதேயம்” என்னும் பக்ஷத்திலும், ப்ரபத்த்யுத்தர காலம் தன் வர்ணாச்ரமாதிகாரங்களுக்கு அநுரூபமாக அடைத்த கைங்கர்யத்தையும் இழந்து அஹிம்ஸா ஸத்யவசநாதி ஸாமாந்ய தர்மங்களையும் ஆசார்ய வந்தனாதிகளையும் தவிர்ந்து பசு ம்ருக பக்ஷ்யாதிகளைப் போலே திரியும்படியாம்.
– ஒரு சிலர், “அவரவர்களுடைய குலங்களுக்கு உரியதாகவும், அவரவர்களுடைய ஆச்ரம அதிகாரங்களுக்கு ஏற்றதாகவும் உள்ள அனைத்தையும் கைவிடுதல் என்பது ப்ரபத்திக்கு அங்கமாகும்”, என்று கூறுகிறார்கள். இவ்விதம் செய்தால், ப்ரபத்திக்கு பின்னர் வரும் காலங்களில் அவர்கள் தங்களுடைய வர்ணாச்ரமத்திற்கு ஏற்றதாக சாஸ்த்ரங்களில் விதிக்கப்பட்ட பகவத் கைங்கர்யங்களை இழப்பர், அஹிம்ஸை – உண்மையைப் பேசுதல் முதலான தர்மங்களையும் இழப்பர், ஆசார்யர்களை அண்டாமல் இருப்பர், பசு மற்றும் பறவைகள் போன்று திரிந்தபடி இருப்பர்.