Srimad Rahasyatrayasaram - ஸம்ப்ரதாய ப்ரக்ரியா பாகம் – 29.சரம ச்லோக அதிகாரம் (பத்தி 16)
ஸம்ப்ரதாய ப்ரக்ரியா பாகம் – 29.சரம ச்லோக அதிகாரம்
“பரித்யஜ்ய” என்னும் பதத்திற்கு மற்றவர்கள் கூறும் பொருள்களுக்கு மறுப்பு
மூலம் – ஈச்வரனைப் பற்ற அத்யந்த பரதந்த்ரதையாலே உபாயாந்தரங்களுக்கு க்ஷேத்ரஜ்ஞன் நித்யாசக்தன் என்று கட்டி, இவனுக்கு அவற்றினுடைய த்யாகத்தை விதிக்கிறதென்னுமது ஸர்வசாஸ்த்ர ஸ்வவசந ஸ்வப்ரவ்ருத்த்யாதி விரோதத்தாலே அத்யந்த பரிஹாஸ்யம். அப்போது துல்ய ந்யாயதையாலே “வ்ரஜ” என்கை தானும் கடியாது. உபாயாந்தரங்களுக்கு ஜீவாத்மா நித்யாசக்தனென்கை தங்களுக்கு அநிஷ்டமான அநுவாத பக்ஷத்துக்கு ஸ்த்ரீகரணம் பண்ணினபடியாமத்தனை. ஏகப்ரயோகந்தானே அசக்தனைப் பற்றத் த்யாகாநுவாதமாய் இதரனைப் பற்றாத் த்யாக விதியாகை ஏகவாக்யத்தில் கடியாது.
– க்ஷேத்ரஜ்ஞனான ஜீவாத்மா ஸர்வேச்வரனை நம்பியே உள்ளதாலும், அவனுக்கு வசப்பட்டவனாகவே உள்ளதாலும், எப்போதும் மற்ற உபாயங்களைக் கைக்கொள்ளவதற்கான சக்தி அற்றவன் என்று தீர்மானித்து, அதன் காரணமாக அந்த உபாயங்களைக் கைவிடவேண்டும் என்று கூறுதல் அனைத்து சாஸ்த்ரங்களுக்கு விரோதமாக உள்ளதாலும், இதனை இவ்விதம் உபதேசம் செய்பவர்கள் கூறுவதற்கும் செய்வதற்கும் முரணாக உள்ளதாலும் எல்லையற்ற பரிகாசத்திற்கு உட்பட வேண்டியதே ஆகும் (அதாவது ஒருவனுக்கு ஒரு செயலைச் செய்ய சக்தி இல்லை என்று கூறிய பின்னர், அவன் அந்தச் செயலைச் செய்யாமல் துறக்கவேண்டும் என்று கூறுவது பரிகாசத்திற்கு உரியது அல்லவோ). இவ்விதம் இவர்கள் கூறியதை ஏற்றுக்கொண்டால், அதே கருத்தின்படி “வ்ரஜ – என்னை அடைவாய்” என்று கூறுவதையும் இயற்றமுடியாது (சக்தி இல்லை) என்றே ஆகிறது. ஜீவாத்மா எப்போதும் மற்ற உபாயங்களைக் கைக்கொள்ளும் சக்தி அற்றவன் என்று கூறுபவர்கள், “பரித்யஜ்ய” என்பது முன்பே நடந்த ஒன்றை மீண்டும் கூறுகிறது என்பதை இவர்கள் ஏற்க மறுக்கிறார்கள் (அதாவது ஒருவனுக்கு ஒறு செயலைச் செய்யும் சக்தி இல்லை என்பது, அந்தச் செயலை அவன் முன்பு ஒருமுறையேனும் செய்தால் அல்லவோ உணர இயலும்). மேலும் ஒரு வாக்கியத்தில் ஒரே முறை ஒரு சொல்லை பயன்படுத்துவதன் மூலம் – “ஒருவனுக்கு ஒரு செயலைச் செய்வதற்கான சக்தி இல்லாத காரணத்தால் என்ன நடந்தது”, “ஒருவனால் ஒரு செயலைச் செய்ய முடிந்த காரணத்தால் அதனைத் துறக்கவேண்டும்” – ஆகிய இரண்டையும் ஒருசேர உரைக்க இயலாது.