Srimad Rahasyatrayasaram - ஸம்ப்ரதாய ப்ரக்ரியா பாகம் – 29.சரம ச்லோக அதிகாரம் (பத்தி 15)

ஸம்ப்ரதாய ப்ரக்ரியா பாகம் – 29.சரம ச்லோக அதிகாரம்

“பரித்யஜ்ய” என்னும் பதத்திற்கு மற்றவர்கள் கூறும் பொருள்களுக்கு மறுப்பு

மூலம் – இங்ஙனன்றிக்கே கர்மயோகம், ஜ்ஞாநயோகம், பக்தியோகமென்கிற தர்மங்களினுடைய ஸ்வரூப த்யாகம் ப்ரபத்திக்கு அங்கமென்னும் பக்ஷத்தில், ப்ரபத்தி ஸர்வாதிகாரமன்றிக்கேயொழியும். தர்மாநிஷ்டாந சக்தனுக்கிறே அவற்றினுடைய த்யாகத்தை விதிக்க வேண்டுவது? இது பஹுப்ரமாண ஸித்தமான கார்ப்பண்யமாகிற அங்கத்துக்கும் “புகலொன்றில்லா அடியேன்”, “குலங்களாய”, “குளித்து மூன்று”, “ந தர்மாநிஷ்ட: அஸ்மி” இத்யாதிகளிலே ப்ரஸித்தமான அகிஞ்சநாதிகாரமென்கிற ஸம்ப்ரதாயத்துக்கும் விருத்தமாம்.

– இவ்விதம் கொள்ளாமல் கர்மயோகம், ஞானயோகம் மற்றும் பக்தியோகம் ஆகியவற்றின் ஸ்வரூபங்களைத் துறத்தல் என்பது ப்ரபத்திக்கு ஓர் அங்கம் (இன்றியமையாத செயல்) என்று கொண்டால், ப்ரபத்தியானத்ய் அனைவரும் கைக்கொள்ளக்கூடிய ஒன்று என்னும் தன்மையை இழந்துவிடும். அந்த மூன்றையும் கைக்கொள்ளவல்ல ஒருவனால் மட்டுமே அல்லவோ அவற்றைத் துறக்க இயலும்? இது, பல ப்ரமாணங்களாலும் ப்ரபத்திக்கு ஒரு அங்கமாக ஏற்கப்பட்டதான “நான் சக்தி அற்றவன்” என்னும் கார்ப்பண்யம் என்பதற்கு முரணாகிவிடும். மேலும் திருவாய்மொழி (6-10-10) – புகல் ஒன்றில்லா அடியேன் – என்றும், திருச்சந்தவிருத்தம் (90) – குலங்களாய – என்றும், திருமாலை (25) – குளித்து மூன்றலை – என்றும், ஸ்தோத்ரரத்னம் (22) – ந தர்மாநிஷ்ட: அஸ்மி – நான் எந்தவிதமான தர்மநிஷ்டைகளிலும் நிற்காதவன் – என்றும் உள்ள வரிகளின் மூலம் வெளிப்படுவதான “எந்தவிதமான உபாயமும் அற்றவன் (அகிஞ்சநன்)” என்னும் அங்கத்துக்கும் முரணாகும்.