Srimad Rahasyatrayasaram - ஸம்ப்ரதாய ப்ரக்ரியா பாகம் – 29.சரம ச்லோக அதிகாரம் (பத்தி 14)
ஸம்ப்ரதாய ப்ரக்ரியா பாகம் – 29.சரம ச்லோக அதிகாரம்
“பரித்யஜ்ய” என்பதன் பொருள்
மூலம் – ப்ரபத்திக்காக ஒரு தர்மமும் அநுஷ்டிக்க வேண்டாவென்று ப்ரபத்தியினுடைய நைரபேக்ஷ்யத்தைச் சொல்லுகிறதென்கை விதிபக்ஷத்துக்கு உசிதம். அப்போது “பரி” என்கிற உபஸர்கம், “ஆசாந்தேந கர்தவ்யம் சுசிநா கர்தவ்யம்” இத்யாதிகளிற் சொல்லுகிற ஸர்வ ஸாதாரண யோக்யதா ஆபாதகங்களும் இதுக்கு அங்கமாக ஸ்வீகார்யங்களாகாவென்று விவக்ஷிக்கிறது.
– “பரித்யஜ்ய” என்பதை ஒரு விதிமுறையாகக் கொண்டால், “ஸர்வ தர்மாந் பரித்யஜ்ய” என்பதற்கு “ப்ரபத்திக்காக எந்த ஒரு தர்மத்தையும் கைக்கொள்ள வேண்டாம்” என்பதே பொருளாகிறது; அதாவது ப்ரபத்தி அவற்றை எதிர்பார்ப்பதில்லை என்று பொருள். இவ்விதம் கொள்ளும்போது “பரி” என்னும் உபஸர்க்கமானது - ஆசாந்தேந கர்தவ்யம் சுசிநா கர்தவ்யம் – இது ஆசமனம் செய்பவன் செய்யவேண்டியது, இது சரீரத்தூய்மையுடன் செய்யவேண்டியது – என்று கூறப்படுவதான, அனைத்துவிதமான கர்மங்களுக்கு ஏற்ற பொதுவான தகுதியை உண்டாக்குகின்ற ஆசமனம், நீராடுதல் போன்றவைகளைக் கூட, ப்ரபத்திக்கு அங்கமாக ஏற்கக்கூடாது என்று தேறுகிறது.