Srimad Rahasyatrayasaram - ஸம்ப்ரதாய ப்ரக்ரியா பாகம் – 29.சரம ச்லோக அதிகாரம் (பத்தி 8)
ஸம்ப்ரதாய ப்ரக்ரியா பாகம் – 29.சரம ச்லோக அதிகாரம்
சரமச்லோகத்தின் முக்கியமான குறிக்கோள்
மூலம் – “ஸர்வதர்மாந்” இந்த ச்லோகத்துக்கு சங்கராதி குத்ருஷ்டிகள் சொல்லும் பொருள்களையெல்லாம் தாத்பர்யசந்த்ரிகையிலும், நிக்ஷேபரக்ஷையிலும் பரக்க தூஷித்தோம். இங்கு ஸாரமான அர்த்தங்களை ஸத் ஸம்ப்ரதாய ஸித்தமானபடியே சொல்லுகிறோம். இதில் பூர்வார்த்தம் உபாய விதாயகம், உத்தரார்த்தம் பல நிர்த்தேசாதிமுகத்தாலே விதிசேஷம். ஆகையால் இச் ச்லோகம் உபாயவிதிநா ப்ரதாநம்.
– “ஸர்வதர்மாந்” என்று தொடங்கும் இந்த சரமச்லோகத்துக்கு ஆதிசங்கரர் முதலானவர்கள் கூறிய அர்த்தங்களை தாத்பர்யசந்த்ரிகை மற்றும் நிக்ஷேபரக்ஷை ஆகியவற்றில் விரிவாகக் கண்டித்தோம். இந்த ச்லோகத்தின் சாரத்தை திருக்கோஷ்டியூர் நம்பி மூலமாகப் பெறப்பட்ட கருத்தை முன்னிறுத்தி உரைக்கிறோம். இந்த ச்லோகத்தின் முதற்பகுதியானது உபாயத்தை விதிப்பதாகும். இரண்டாம் பகுதியானது பலன் முதலானவற்றைக் கூறுவதால் விதிவாக்கியத்தின் அங்கமாக உள்ளது. ஆகவே இந்த ச்லோகமானது உபாயத்தை விதிப்பதையே குறிக்கோளாகக் கொண்டுள்ளது. சரமச்லோகத்தின் முதல் பாகத்தின் விளக்கம்