Srimad Rahasyatrayasaram - ஸம்ப்ரதாய ப்ரக்ரியா பாகம் – 29.சரம ச்லோக அதிகாரம் (பத்தி 7)

ஸம்ப்ரதாய ப்ரக்ரியா பாகம் – 29.சரம ச்லோக அதிகாரம்

சரமச்லோகத்தின் அவதாரிகை

மூலம் – ச்ருதி ஸித்தமான இவ்வர்த்தத்தை சரண்யனான ஸர்வேச்வரன் தானே உபதேசிக்க, இதுதானே “ஸந்த்யஜ்ய விதிநா நித்யம் ஷட்விதம் சரணாகதிம் ஆசார்யாநுஜ்ஞாயா குர்யாத் சாஸ்த்ர த்ருஷ்டேந வர்த்மநா” என்று ஸ்ரீவிஷ்ணுதத்வாதிகளிற் சொன்ன ஆசார்யாநுஜ்ஞையுமாயிற்று.

– ச்ருதிகளிலும் வெளிப்படுத்தப்பட்ட இந்த ஆழ்பொருளை, அனைவரும் சரணம் புகத்தக்கவனாகிய ஸர்வேச்வரன் தனது திருவாய் கொண்டு தானே உபதேசித்தான். ஆகவே இந்த சரமச்லோகமானது, ஸ்ரீவிஷ்ணுதத்வம் – ஸர்வதர்மாந் ஸர்வகாமாந் ஐஹிகாமுஷ்மிகாநபி ஸந்த்யஜ்ய விதிநா நித்யம் ஷட்விதம் சரணாகதிம் ஆசார்யாநுஜ்ஞாயா குர்யாத் சாஸ்த்ர த்ருஷ்டேந வர்த்மநா – அனைத்து கர்மங்கள், அவற்றுக்குச் சாதனமாக உள்ள அனைத்து கர்மங்கள் ஆகியவற்றைக் கைவிட்டு, ஐந்து அங்கங்களுடன் கூடிய சரணாகதியை (ஐந்து அங்கங்கள், சரணாகதி என்னும் ஒரு அங்கி = ஆறு), ஆசார்யனுடைய அனுமதியைப் பெற்ற பின்னர், சாஸ்த்ரங்களில் விதிக்கப்பட்டபடி பலன்களைத் துறந்து இயற்றவேண்டும் – என்பதற்கு ஏற்ப, ஆசார்யனுடைய அனுமதியுடன் கைக்கொண்டதாயிற்று.