Srimad Rahasyatrayasaram - ஸம்ப்ரதாய ப்ரக்ரியா பாகம் – 29.சரம ச்லோக அதிகாரம் (பத்தி 2)

ஸம்ப்ரதாய ப்ரக்ரியா பாகம் – 29.சரம ச்லோக அதிகாரம்

துர்விஜ்ஞாநைர் நியமகஹநை: தூரவிச்ராந்திதேசை: பால அநர்ஹை: பஹுபி: அயநை: சோசதாம் ந: ஸுபந்தா: நிஷ்ப்ரத்யூஹம் நிஜபதமஸௌ நேதுகாம: ஸ்வபூம்நா ஸத்பாதேயம் கமபி விததே ஸாரதி: ஸர்வநேதா

– அறிந்துகொள்வதற்கு மிகவும் கடினமாகவும், பலவிதமான கட்டுப்பாடுகள் உள்ளதால் இயற்றுவதற்குக் கடினமாகவும், தாமதமாகவே பலன் அளிப்பதாகவும், கைம்முதல் இல்லாதவர்களுக்குக் கைக்கொள்ள இயலாததாகவும் உள்ள பலவிதமான உபாயங்களால் நாம் வருந்தி (கலங்கி) நிற்கிறோம். இப்படியுள்ள நமக்கு, நல்லதொரு உபாயமாகவும், அனைவரையும் நெறிப்படுத்தி பலன் அளிப்பவனாகவும், தேர் ஓட்டுபவனாகவும் உள்ள க்ருஷ்ணன், தனது மேன்மை காரணமாக, எந்தவிதமான தடையும் இல்லாமல் நம்மை அவனுடைய இடத்திற்கு அழைத்துச் செல்ல எண்ணியவனாக, மேன்மையான சிறந்த மார்க்கத்தை (ப்ரபத்தியை சரம ச்லோகத்தில்) விதித்தான்.