Srimad Rahasyatrayasaram - ஸம்ப்ரதாய ப்ரக்ரியா பாகம் – 29.சரம ச்லோக அதிகாரம் (பத்தி 1)
ஸம்ப்ரதாய ப்ரக்ரியா பாகம் – 29.சரம ச்லோக அதிகாரம்
ய உபநிஷதாமந்தே யஸ்மாதநந்த தயாம்புதே: த்ருடித ஜநதா சோக: ச்லோக: ஸ்வயம் ஸமஜாயத தமிஹ விதிநா க்ருஷ்ணம் தர்மம் ப்ரபத்ய ஸநாதநம் சமித துரித சங்காதங்க த்யஜ: ஸுகமாஸ்மஹே
– எந்த ஸர்வேச்வரன் உபநிஷத்துக்களின் அருகே உள்ளானோ, எல்லையற்ற கருணைக்கடலாக உள்ள எந்த ஒரு ஸர்வேச்வரனிடமிருந்து இந்த உலகில் உள்ளவர்களுடைய துன்பங்களை விலக்கக்கூடிய சரமச்லோகம் தானாகவே வெளிப்பட்டதோ, அப்படிப்பட்ட ஸித்தோபாயமாகிய க்ருஷ்ணனைத் தகுந்த முறைப்படிச் சரணம் புகுந்து தங்களுடைய பாபங்கள் அனைத்தையும் கைவிட்டவர்களாக, சந்தேகம் – அச்சம் போன்றவற்றைக் கைவிட்டவர்களாக, சுகமாக உள்ளோம்.