Srimad Rahasyatrayasaram - ஸம்ப்ரதாய ப்ரக்ரியா பாகம் – 28.த்வயாதிகாரம் (பத்தி 71)

ஸம்ப்ரதாய ப்ரக்ரியா பாகம் – 28.த்வயாதிகாரம்

“நம:” என்பதற்கு அருளாளப்பெருமாள் எம்பெருமானாருடைய விளக்கம்

மூலம் – ஸ்தூலப்ரக்ரியையைக் கொண்டாலும், “நமாமி” என்கிற பதத்தை ஆத்ம ஸமர்ப்பணார்த்தமென்று வ்யாக்யானம் பண்ணின பதஸ்தோத்ர ப்ரக்ரியையாலே, இந் நம: சப்தம் ஸமர்ப்பணப் பொருளுக்கு ஸங்கதம். இப்படி உத்தரகண்டத்தை ஆத்ம ஸமர்ப்பண பரமாக அநுஸந்திப்பார்க்கு, இதுக்கு அநுரூபமாய் ஸ்வரூபாநுபந்தியான பலவிசேஷம் இங்கே ஸ்வத: ப்ராப்தம். பூர்வோக்தமானபடியே பலபரமாக உத்தரகண்டத்தை அநுஸந்திப்பார்க்கு, இவ்வாத்ம ரக்ஷாபரஸமர்ப்பணம், உபாயபரமான பூர்வகண்டத்தில் சரண சப்தாந் விதமான க்ரியாபதத்திலே அநுஸந்தேயம்.

– “நம:” என்னும் சொல்லுக்கு நேரடியாக உள்ள சாதாரண பொருளைக் கொண்டாலும், மந்த்ரராஜபத ஸ்தோத்ரத்தில் “நமாமி” என்னும் பதத்திற்கு “ஆத்மாவைச் சமர்ப்பணம் செய்தல்” என்று பொருள் கூறுவது போன்றே, “நம:” என்னும் சொல்லுக்கு “சமர்ப்பணம் செய்கிறேன்” என்று பொருள் கொள்ளலாம். ஆக த்வயத்தின் இரண்டாவது வரியானது ஆத்ம ஸமர்ப்பணத்தைக் கூறுகிறது என்று பொருள் கொள்பவர்களுக்கு, அவர்களுடைய ஆத்ம ஸ்வரூபத்திற்குச் சேருவதான பகவத் கைங்கர்யம் என்பது பலனாக உண்டாகிறது என்பது தானாகவே வெளிப்படுகிறது. அல்லது த்வயத்தின் இரண்டாவது வரியானது மேலே கூறியது போன்று பலனாகிய கைங்கர்யத்தைக் கூறுகிறது என்று பொருள் கொள்பவர்களுக்கு, உபாயத்தைக் கூறுவதான முதல் வரியானது சரணம் என்னும் பொருளை உணர்த்தும் வினைமுற்றான “ப்ரபத்யே” என்பதன் மூலம், ஆத்ம ஸமர்ப்பணத்தைக் கூறுவதாகக் கொள்ளவேண்டும்.