Srimad Rahasyatrayasaram - ஸம்ப்ரதாய ப்ரக்ரியா பாகம் – 28.த்வயாதிகாரம் (பத்தி 66)

ஸம்ப்ரதாய ப்ரக்ரியா பாகம் – 28.த்வயாதிகாரம்

“நம:” என்பதன் பொருள்

மூலம் – இந்நமஸ்ஸுக்கும் க்ரியாபதம் அத்யாஹரித்துக் கொள்ளவேணும்; “ந மம ஸ்யாம்” என்றது “எனக்காவேனல்லேன்” என்றபடி. “ந மம கிஞ்சித் ஸ்யாத்” என்று ஸர்வவிஷய மமகார நிவ்ருத்தி முகத்தாலே ஸர்வாநிஷ்ட நிவ்ருத்தியைப் ப்ரார்த்திக்கிறதாகவுமாம். திருமந்த்ரத்தில் இஷ்ட ப்ராப்தி அநிஷ்ட நிவ்ருத்தி சொன்ன சோத்ய பரிஹாரங்கள் இங்கும் அநுஸந்தித்துக் கொள்வது.

– இந்த “நம:” என்னும் சொல்லின் பின்னால் ஒரு வினைமுற்றை வரவழைத்துக் கொள்ளவேண்டும். அதாவது “ந மம ஸ்யாம் = நான் எனக்காக வாழ்பவன் அல்லன்” என்று பொருள் தரும்படியாக “ஸ்யாம்” என்னும் வினைமுற்றைச் சேர்த்தல் வேண்டும். அல்லது “ந மம கிஞ்சித் ஸ்யாத் = என்னுடையது என்பதாக எந்த ஒரு பொருளும் இருத்தல் வேண்டாம்” என்று [இங்கு “ஸ்யாத், கிஞ்சித்” என்னும் இரண்டு சொற்கள் சேர்க்கப்பட்டன] படித்துப் பொருள் கொள்ளலாம்; இதனால் அனைத்து பொருள்களிலும் “இவை என்னுடையது” என்னும் மமகாரம் நீங்குதல் ப்ரார்த்திக்கப்பட்டு, நமக்கு விருப்பம் அல்லாத அனைத்தும் நீங்குதலுக்கான ப்ரார்த்தனை செய்யப்படுகிறது என்றும் கொள்ளலாம். திருமந்த்ரந்தின் மூலம் நமக்கு விருப்பமானவை வந்து சேர்தல் மற்றும் விருப்பம் அல்லாதவை விலகுதல் குறித்த உண்டான சந்தேகங்களும் அவற்றுக்கான சமாதானங்களும், கடந்த அத்யாயத்தில் கூறப்பட்டன; அவற்றையே இங்கும் கொள்ளலாம்.