Srimad Rahasyatrayasaram - ஸம்ப்ரதாய ப்ரக்ரியா பாகம் – 28.த்வயாதிகாரம் (பத்தி 64)

ஸம்ப்ரதாய ப்ரக்ரியா பாகம் – 28.த்வயாதிகாரம்

த்வயத்தின் இரண்டாம் வரியில் உள்ள “நாராயண” என்பதன் பயன்

மூலம் – “ஸ்ரீமதே” என்கிற சப்தந்தன்னாலே விசிஷ்டமான ப்ரதிஸம்பந்தி தோற்றிற்றே யாகிலும், ஸர்வவித கைங்கர்யத்துக்கும் ப்ரயோஜநமான ப்ரீதி விசேஷத்தைப் பிறப்பிக்கும் ஸம்பந்த குண விபூத்யாதி பரிபூர்ணாநுபவ ஸித்திக்காக இங்கு நாராயண சப்தம், ப்ரயுக்தமாகிறது.

த்வயத்தின் இரண்டாம் வரியில் உள்ள “ஸ்ரீமதே” என்னும் பதம் மூலமே பிராட்டியுடன் சேர்ந்த நாராயணனும் கூறப்பட்டாலும் - அனைத்துவிதமான கைங்கர்யங்களையும்; அதன் மூலம் பகவானுடனான ஸம்பந்தம், அவனுடைய குணம் மற்றும் விபூதிகள் போன்றவற்றால் உண்டாகவல்ல ப்ரீதியுடன் கூடிய முழுமையான அனுபவத்தையும் அளிக்கவல்லது பகவத் அனுபவமே ஆகும். இந்த ஸம்பந்தத்தையும், அனுபவத்தையும் உணர்த்தவே “நாராயண” என்னும் பதம் தனியாகவும் கூறப்படுகிறது.