Srimad Rahasyatrayasaram - ஸம்ப்ரதாய ப்ரக்ரியா பாகம் – 28.த்வயாதிகாரம் (பத்தி 63)
ஸம்ப்ரதாய ப்ரக்ரியா பாகம் – 28.த்வயாதிகாரம்
த்வயத்தின் இரண்டாம் வரியில் உள்ள “ஸ்ரீமத்” என்பதன் பொருள்
மூலம் – இங்குற்ற ஸ்ரீ சப்தம், ச்ருணாதி நிகிலாந் தோஷாந் ஸ்ரீணாதி ச குணைர்ஜகத் ஸ்ரீயதே ச அகிலைர் நித்யம் ச்ரயதே ச பரம் பதம் ச்ரயந்தீம் ஸ்ரீயமாணாம் ச ச்ருணதீம் ச்ருண்வதீமபி இத்யாதிகளிற்படியே, அநேகார்த்தங்கள் உண்டேயாகிலும், “ஸ்ரீஞ்ஸேவாயாம்” என்கிற தாதுவிலே ஸேவ்யத்வாதிகளைச் சொல்லிக் கொண்டு கைங்கர்ய ப்ரதிஸம்பந்தித்வபரம்.
– த்வயத்தின் இரண்டாம் வரியில் உள்ள “ஸ்ரீ” என்னும் பதம் : ச்ருணாதி நிகிலாந் தோஷாந் ஸ்ரீணாதி ச குணைர்ஜகத் ஸ்ரீயதே ச அகிலைர் நித்யம் ச்ரயதே ச பரம் பதம் – மஹாலக்ஷ்மி அனைத்து தோஷங்களையும் விலக்குகிறாள், இந்த உலகில் உள்ளவர்களுக்கு நல்ல குணத்தை அளிக்கிறாள், அனைவராலும் எப்போதும் அடையப்படுகிறாள், தானும் ஸர்வேச்வரனை அடைகிறாள் அஹிர்புத்ந்ய ஸம்ஹிதை (21-8) - ச்ரயந்தீம் ஸ்ரீயமாணாம் ச ச்ருணதீம் ச்ருண்வதீமபி – தான் ஸர்வேச்வரனை அடைபவளாகவும், மற்றவர்களால் தான் அடையப்படுபவளாகவும், அவர்களுடைய குறைகளைக் கேட்பவளாகவும் என்பதான வரிகளில் கூறப்படுவதற்கு ஏற்ப பலவிதமான அர்த்தங்களை அளிப்பதாக உள்ளது என்றாலும், இங்கு அந்தப் பதம் “ஸேவிக்கப்படுபவள்” என்னும் பொருளைய்யே அடைகிறது; ஆக அந்தப் பதம், “கைங்கர்யங்களைப் பெறுகிறாள்” என்னும் பொருளை அளிப்பதாகும்.