Srimad Rahasyatrayasaram - ஸம்ப்ரதாய ப்ரக்ரியா பாகம் – 28.த்வயாதிகாரம் (பத்தி 62)
ஸம்ப்ரதாய ப்ரக்ரியா பாகம் – 28.த்வயாதிகாரம்
த்வயத்தின் இரண்டாம் வரியில் உள்ள “ஸ்ரீமத்” என்பதன் பொருள்
மூலம் – இப்படி உபயவிபூதி விசிஷ்டம் ப்ராப்யமாயிருக்கச் செய்தேயும் ஆத்ம ஹவிருத்தேச்ய ரூபமாய், சேஷத்வ ப்ரதிஸம்பந்திகளுமாய், அதடியாக வருகிற கைங்கர்யத்துக்கும் இலக்காய்க் கொண்டு, ப்ரதாந ப்ராப்யருமாயிருப்பார் இவ் விசிஷ்ட தம்பதிகள் என்று தோற்றுகைக்காக இங்கு ஸ்ரீமச்சப்தம். இவ்வர்த்தம், “வைகுண்டே து பரே லோகே ஸ்ரீயா ஸார்தம் ஜகத்பதி:”, “தயா ஸஹாஸீநம் அநந்த போகிநி”, “ஆத்மாநுரூபயா ஸ்ரீயா ஸஹாஸீநம்”, “ஒண்தொடியாள் திருமகளும் நீயுமே நிலா நிற்ப”, “கோலத் திருமாமகளோடு உன்னை” இத்யாதிகளிலும் விலக்ஷிதம்.
– நித்யவிபூதி மற்றும் லீலாவிபூதி ஆகியவற்றினைக் கொண்ட ஸர்வேச்வரனைக் குறிப்பிட்டால் மட்டுமே போதுமானது என்றாலும், “ஸ்ரீமத்” என்பதும் த்வயத்தின் இரண்டாம் வரியில் உள்ளது. இது ஏனென்றால் – சேதநன் அளிக்கின்ற ஆத்மா என்னும் அவிர்பாகத்தை ஏற்பவர்களாகவும், சேதநனுடைய அடிமைத்தனத்திற்கு ஏற்ற எஜமானர்களாகவும், அதன் மூலம் உண்டாகின்ற கைங்கர்யத்திற்கு இலக்காக உள்ளவர்களாகவும் இருந்தபடி, சேதநனால் முக்கியமான பலனாக அடையப்படுபவர்கள் இந்தத் திவ்யதம்பதிகள் என்பதை உணர்த்தவே ஆகும். இதனைக் கீழே உள்ள பல வரிகளிலும் காணலாம்: லைங்க புராணம் - வைகுண்டே து பரே லோகே ஸ்ரீயா ஸார்தம் ஜகத்பதி: - ஸ்ரீவைகுண்டம் என்னும் உயர்ந்த லோகத்தில், அனைத்து லோகங்களுக்கும் எஜமானனாகிய ஸர்வேச்வரன், தனது பத்தினியுடன் உள்ளான் ஸ்தோத்ரரத்னம் (39) - தயா ஸஹாஸீநம் அநந்த போகிநி – ஆதிசேஷன் மீது பிராட்டியுடன் எழுந்தருளியுள்ள ஸ்ரீவைகுண்டகத்யம் (சூர்ணை 4) - ஆத்மாநுரூபயா ஸ்ரீயா ஸஹாஸீநம் – தனக்கு ஏற்றபடியாக உள்ள பிராட்டியுடன் உள்ள திருவாய்மொழி (4-9-10) - ஒண்தொடியாள் திருமகளும் நீயுமே நிலா நிற்ப திருவாய்மொழி (6-9-3) - கோலத் திருமாமகளோடு உன்னை த்வயத்தின் இரண்டாம் வரியில் உள்ள “ஸ்ரீ” என்பதன் முக்கிய பொருள்