Srimad Rahasyatrayasaram - ஸம்ப்ரதாய ப்ரக்ரியா பாகம் – 28.த்வயாதிகாரம் (பத்தி 61)
ஸம்ப்ரதாய ப்ரக்ரியா பாகம் – 28.த்வயாதிகாரம்
த்வயத்தின் இரண்டாம் வரியில் உள்ள “நாராயண” என்பதன் பொருள்
மூலம் – இவ்விடத்திலே ஸவிசேஷணமான நாராயண சப்தம், ப்ராப்யதைக்கு அநுரூபமான ஸ்வாமித்வாதிகளும் அநந்த குண விபூதி விசிஷ்டனான ஸ்வாமியினுடைய ஸர்வ ப்ரகார நிரதிசய போக்யதையுமாகிற ஆகாரங்களை யதா ப்ரமாணம் ப்ராதந்யேந காட்டுகிறது.
– இரண்டாம் வரியில் உள்ள “நாராயண” என்னும் பதம் (”ஸ்ரீமதே நாராயணாய நம:” என்பதில் உள்ள பதம்) - ஸர்வேச்வரன் அனுபவிக்கப்படும் பலனாக இருப்பதற்குத் தேவையான எஜமானத்தன்மை போன்றவற்றையும், எல்லையற்ற குணங்கள் – விபூதிகள் போன்றவை நிறைந்த ஸர்வேச்வரன் அனைத்துவிதங்களிலும் இன்பம் அளிப்பவனாக இருத்தல் போன்றவற்றையும் தகுந்த ப்ரமாணங்களை முன்னிட்டு உணர்த்துகிறது.