Srimad Rahasyatrayasaram - ஸம்ப்ரதாய ப்ரக்ரியா பாகம் – 28.த்வயாதிகாரம் (பத்தி 59)
ஸம்ப்ரதாய ப்ரக்ரியா பாகம் – 28.த்வயாதிகாரம்
த்வயத்தின் முற்பகுதியில் உள்ள விஷயங்கள்
மூலம் – இப்படி ஸர்வசரண்யத்வமும், சரணாகதி ஸ்வரூபமும், இதின் பரிகரங்களும், அதிகாரி விசேஷமும் பூர்வகண்டத்திலே ப்ரகாசிதமாயிற்று. இத்தாலே அநந்யோபாயத்வமும் ஸித்தித்தது.
– ஆக த்வயத்தின் முற்பகுதியானது, அனைவருக்கும் புகலிடமாக ஸர்வேச்வரன் உள்ள தன்மை, சரணாகதியின் தன்மை, அதன் அங்கங்கள், இதனைக் கைக்கொள்ளும் ஒருவனுடைய தன்மைகள் போன்ற பலவற்றையும் கூறியது. இதன் மூலம், ஜீவாத்மாவுக்கு வேறு உபாயம் ஏதும் இல்லை என்பதும் வெளிப்பட்டது.