Srimad Rahasyatrayasaram - ஸம்ப்ரதாய ப்ரக்ரியா பாகம் – 28.த்வயாதிகாரம் (பத்தி 55)

ஸம்ப்ரதாய ப்ரக்ரியா பாகம் – 28.த்வயாதிகாரம்

ப்ரபத்யே என்பதன் தன்மை விகுதியினுடைய பொருள்

மூலம் – மோக்ஷப்ரதமான ஸித்தோபாயத்துக்கு முமுக்ஷுவின் பக்கலிலே உள்ளதொரு சாஸ்த்ரீயமான ஸாத்ய வ்யாஜம் வசீகரணமென்னுமிடம் தன்னைக் கர்த்தாவாகக் காட்டுகிற உத்தமனாலே ஸித்தம்.

– சேதநனை ப்ரபத்தியில் கர்த்தாவாகக் காண்பிக்கின்றதான “ப்ரபத்யே” என்பதில் உள்ள முதலாம் நபர் ஒருமை (நான்) என்பது, மோக்ஷத்தை பலனாக அளிக்கவல்ல ஸித்தோபாயமான ஸர்வேச்வரனை வசப்படுத்தும் உபாயமாக உள்ளது; இது சாஸ்த்ரங்களில் விதிக்கப்பட்டதான பல வழிகளில் ஒன்று (பக்தி, ப்ரபத்தி போன்றவை) என்றாகிறது.