Srimad Rahasyatrayasaram - ஸம்ப்ரதாய ப்ரக்ரியா பாகம் – 28.த்வயாதிகாரம் (பத்தி 53)

ஸம்ப்ரதாய ப்ரக்ரியா பாகம் – 28.த்வயாதிகாரம்

த்வயத்தின் இரண்டு பகுதிகளாலும் ப்ரார்த்திக்கப்படுபவை

மூலம் – ஆனாலும் இப்படி உபாயமாய் நிற்கவேணுமென்று அபேக்ஷிக்கவே அபிமத பலவிசேஷத்தை உபாயாந்தர வ்யவதாநமறத் தரவேணுமென்று ப்ரார்த்தித்ததாகாதோ? ஆகையால், உத்தரகண்டத்தில் ப்ரார்த்தனை மிகுதியன்றோ என்னில், உக்தப்ரகாரத்தாலே ப்ராத்தநா விஷயத்தில் அம்சபேதம் தோற்றுகைக்காகப் பிரிய அபேக்ஷிக்கிறதாகையாலே மிகுதியில்லை. உத்தரகண்டத்தில் அபேக்ஷணீய பலவிசேஷ வ்யஞ்ஜகமான வாக்யத்தினுடைய அந்வயமாத்ரத்துக்காக ப்ரார்த்தநா பதம் அத்யாஹரித்தாலும் பலஸ்வரூப மாத்ரத்திலே தாத்பர்யமென்று பரிஹாரமாகவுமாம்.

– ஆனால் ஸர்வேச்வரன் இவ்விதம் உபாயமாக இருத்தல் வேண்டும் என்று விண்ணப்பம் செய்வது என்பது, மற்ற எந்தவிதமான உபாயங்களும் அவசியம் இன்றி அவனே வந்து பலனை அளிக்கவேண்டும் என்னும் விண்ணப்பத்தினை ஒத்துள்ளது அல்லவோ? இவ்விதம் கொண்டால் த்வயத்தின் இரண்டாம் பகுதி கூறியது கூறல் என்றாகிவிடும் அல்லவோ? இதற்கான சமாதானம் – இவ்விதம் கொள்வதற்கில்லை; காரணம் இரண்டாம் பகுதியின் ப்ரார்த்தனையில், முதல் பகுதியின் மூலம் கூறப்படும் விண்ணப்பத்தினைக் காட்டிலும் வேறுபட்ட அம்சங்களே உள்ளன [அதாவது முதல் பகுதியில் உள்ள விண்ணப்பத்தில் அவனே உபாயமாக இருத்தல்வேண்டும் என்று கூறும்போது, அவன் உபாயமாக வரவேண்டும் என்பது அல்லாமல் வேறு பலனைக் குறித்து விண்ணப்பம் இல்லை. ஆனால், இரண்டாவது பகுதியில், பலனை விரும்புதல் என்னும் அம்சம் உள்ளது]. இரண்டாவது பகுதியில் பலனுக்கான ப்ரார்த்தனையைக் குறிக்கும் சொல் என்பது அந்தப் பகுதியை முழுமை அடையச் செய்வதற்காகவே உள்ளது என்றபோதிலும் - முதல் பகுதியில் அவனே உபாயமாக இருத்தல்வேண்டும் என்னும் விண்ணப்பம் உள்ளது என்றாலும், இரண்டாவது பகுதியில்தான், வேண்டும் பலன் இன்னது என்று கூறப்படுகிறது.