Srimad Rahasyatrayasaram - ஸம்ப்ரதாய ப்ரக்ரியா பாகம் – 28.த்வயாதிகாரம் (பத்தி 49)
ஸம்ப்ரதாய ப்ரக்ரியா பாகம் – 28.த்வயாதிகாரம்
ப்ரபத்திக்கான அங்கங்களை சரண சப்தத்துடன் ப்ரபத்யே என்னும் பதம் கூறுதல்
மூலம் – இவ்விச்வாஸ தாடர்யம் வேணுமென்னுமிடத்தை ராக்ஷஸாநாம் அவிஸ்ரம்பாத் ஆஞ்ஜநேயஸ்ய பந்தநே யதா விகலிதா ஸத்ய: த்வமோகா அப்யஸ்த்ர பந்தநா ததா பும்ஸாமவிஸ்ரம்பாத் ப்ரபத்தி: ப்ரச்யுதா பவேத் தஸ்மாத் விஸ்ரம்ப யுக்தாநாம் முக்திம் தாஸ்யதி ஸாசிராத் என்று சொல்லிற்று. இவ் வ்யவஸாயத்தினுடைய ப்ரபாவம், “வ்யவஸாயாத்ருதே ப்ரஹ்ம நாஸாதயதி தத்பரம்”, “நிஸ்ஸம்சயேஷு ஸர்வேஷு நித்யம் வஸதி வை ஹரி: | ஸஸம்சயாந் ஹேதுபலாந் நாத்யாவஸதி மாதவ:” இத்யாதிகளிலும் ஸுப்ரஸித்தம்.
– இத்தகைய உறுதியான நம்பிக்கை வேண்டும் என்பதை, ஸநத்குமார ஸம்ஹிதை - ராக்ஷஸாநாம் அவிஸ்ரம்பாத் ஆஞ்ஜநேயஸ்ய பந்தநே யதா விகலிதா ஸத்ய: த்வமோகா அப்யஸ்த்ர பந்தநா ததா பும்ஸாமவிஸ்ரம்பாத் ப்ரபத்தி: ப்ரச்யுதா பவேத் தஸ்மாத் விஸ்ரம்ப யுக்தாநாம் முக்திம் தாஸ்யதி ஸாசிராத் – அனுமன் ப்ரஹ்மாஸ்த்ரத்தால் கட்டுண்டான்; அப்போது அரக்கர்களுக்கு அந்த ப்ரஹ்மாஸ்த்ரம் மீது உண்டான நம்பிக்கை தளர்வு காரணமாக அந்த ப்ரஹ்மாஸ்த்ரம் நழுவியது; இது போன்றே ப்ரபத்தியின் மீது நம்பிக்கை குறைந்தால், ப்ரபத்தி பலனற்றதாகிறது. ஆகவே ப்ரபத்தில் நம்பிக்கை உள்ளவர்களுக்கே மோக்ஷம் கிட்டும் – என்றது. இத்தகைய உறுதியான நம்பிக்கையின் மேன்மையானது கீழே உள்ள வரிகள் மூலம் அறியலாம்: மஹாபாரதம் சாந்திபர்வம் (334-47) - வ்யவஸாயாத்ருதே ப்ரஹ்ம நாஸாதயதி தத்பரம் – மனதில் உறுதி இல்லை என்றால், ப்ரஹ்மத்தை அடையமாட்டான் மஹாபாரதம் சாந்திபர்வம் (359-71) - நிஸ்ஸம்சயேஷு ஸர்வேஷு நித்யம் வஸதி வை ஹரி: | ஸஸம்சயாந் ஹேதுபலாந் நாத்யாவஸதி மாதவ: - சந்தேகம் இல்லாத அனைவரிடமும் மாதவன் அவர்கள் அருகிலேயே உள்ளான். ஐயம் கொள்பவர்களை அவன் விட்டுச் செல்கிறான்