Srimad Rahasyatrayasaram - ஸம்ப்ரதாய ப்ரக்ரியா பாகம் – 28.த்வயாதிகாரம் (பத்தி 43)

ஸம்ப்ரதாய ப்ரக்ரியா பாகம் – 28.த்வயாதிகாரம்

“சரண” என்பதன் பொருள்

மூலம் – இவ்விடத்தில் சரண சப்தம் உபாயே க்ருஹரக்ஷித்ரோ: சப்த: சரணமித்யயம் வர்த்ததே ஸாம்ப்ரதம் த்வேஷ உபாயார்த்தைக வாசக: என்று விசேஷிக்கையாலே உபாயபரம்.

– இங்கு சரணம் என்னும் பதமானது, அஹிர்புத்ந்ய ஸம்ஹிதை (37 – 29) - உபாயே க்ருஹரக்ஷித்ரோ: சப்த: சரணமித்யயம் வர்த்ததே ஸாம்ப்ரதம் த்வேஷ உபாயார்த்தைக வாசக: - சரணம் என்னும் பதம் உபாயம், வீடு, ரக்ஷகன் ஆகியவற்றைக் கூறுவதாகும்; இங்கு உபாயம் என்னும் பொருளே தொனிக்கிறது – என்று சிறப்பித்துக் கூறப்படுவதால், அது உபாயம் என்னும் பொருளையே தருவதாகும்.